Hair Growth Pack Home Remedy
முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் முடி அதிகமாக வளர வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காக பல ரெமிடிகளையும் ட்ரை செய்கின்றனர். இதனால் முடி வளர்ச்சி அதிகரித்தாலும் நாளடைவில் முடியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும். அந்த வகையில் நம் முன்னோர்கள் எல்லாம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்க கூடிய செடிகளான கற்றாழை, செம்பருத்தி போன்றவை தான் பயன்படுத்தினார்கள். இதனால் தான் அவர்களின் முடி உதிர்வு பிரச்சனையும் இல்லை, நரைமுடி பிரச்சனையும் இல்லை. இந்த பதிவில் முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி வளர்ச்சிக்கு கற்றாழை ஹேர் பேக்:
கற்றாழையானது எளிதில் கிடைக்க கூடிய பொருளாக இருக்கிறது. மேலும் இவை தலை முடிக்கு பயன்படுத்துவதால் ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. நீங்கள் வறட்சியாக இருப்பது போல உணர்ந்தால் கற்றாழை சிறந்த மாய்சரைசராக இருக்கும்.
நீங்கள் கற்றாழையை எடுத்து அதன் உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் ஒரு பவுலில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை தலையில் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இது போல நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
மெலிந்து காணப்படும் முடி அடர்த்தியாக இல்லங்க காடுபோல் வளர பாட்டி கூறிய ரகசியம்..!
பப்பாளி ஹேர் பேக்:
பப்பாளியானது முடியின் வளர்ச்சிக்கும், பளபளப்பு தன்மைக்கும் உதவியாக இருக்கிறது. மேலும் பப்பாளி ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
பப்பாளியை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். இதனை மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு மைல்டு ஷாம்புவை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து செய்து வந்தால் முடியின் வளர்ச்சியை நீங்களே காண்பீர்கள்.
மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்! அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |