1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்
ஹலோ நண்பர்களே..! ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் முடி நன்றாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல இருக்கின்ற முடியும் கொட்டாமல் இருக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். அதிலும் பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி தடவுவார்கள். இதனால் முடி மேலும் கொட்டுமே தவிர நன்றாக வளராது. அதனால் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு வீட்டிலேயே ஹேர் பேக் ரெடி செய்து தடவி பாருங்கள். சரி வாங்க நண்பர்களே முடியை வளரவைக்கும் ஹேர் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடியை நீளமாக வளர செய்யும் ஹேர் பேக் செய்யும் முறை:
- பெரிய வெங்காயம் – 3
- முருங்கை கீரை பவுடர் – தேவையான அளவு
- முட்டை – 2
இன்று நாம் எடுத்திருக்கும் பொருட்கள் அனைத்துமே முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் பொருட்கள் தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் முடிக்கு பயன்படுத்தலாம்.
முதலில் பெரிய வெங்காயத்தை எடுத்து இரண்டு பாதியாக வெட்டி கொள்ளுங்கள். பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி, அதில் நாம் அறிந்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
வெங்காயம் நன்றாக கொதித்து அதில் இருக்கும் சாறு தண்ணீரில் இறங்கி, அந்த தண்ணீரின் நிறம் மாறியதும், அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.
1 வாரம் தடவி பாருங்க.. 1 முடி கூட கொட்டாது
பின் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் முருங்கை கீரை பவுடர் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு சேர்த்து கொள்ளுங்கள். பின் அதில் நாம் கொதிக்க வைத்த நீரை மட்டும் வடிகட்டி சேர்த்து கொள்ளவும். இறுதியாக அதில் 2 முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
அவ்வளவு தான் நண்பர்களே ஹேர் பேக் ரெடி..!
முடிக்கு அப்ளை செய்யும் முறை:
இந்த ஹேர் பேக்கை உங்கள் முடிக்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முடியை சிக்கு இல்லாமல் சீவி கொள்ளவும். அதன் பிறகு இந்த ஹேர் பேக்கை உங்கள் முடியில் ஒரு இடம் விடாமல் முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
இதுபோல வாரம் 2 முறை செய்து வந்தால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை காணலாம். உதிர்ந்த முடி அனைத்தும் மீண்டும் வளரும்.
முடி வளர்ச்சிக்காக பாட்டி சொன்ன வைத்தியம் என்னான்னு தெரிஞ்சுக்கோங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |