Long Hair oil Home Remedies
பெண்களை பொறுத்தவரை இரண்டு விதமாக இருப்பார்கள். ஒன்று ஹோம்லி கேர்ள் மற்றொன்று மாடர்ன் கேர்ள் ஆகும். இவ்வாறு இரண்டு விதமாக உடுத்தும் ஆடை முதல் மற்ற Fancy பொருட்கள் என அனைத்தும் வேறுபாட்டுலும் கூட முடி என்று வந்து விட்டால் எல்லோரும் ஒரே மாதிரியாக தான் சிந்திப்பார்கள். ஏனென்றால் பெண்ணாக பிறந்த அனைவருக்கும் இடுப்பிற்கு கீழ் முடி நன்றாக நீளமாக வளர வேண்டும் என்று ஆசை அதிகமாக இருக்கும். அதன் படி பார்த்தால் முடி நீளமாக நாம் அனைவரும் கடையில் விற்கும் எண்ணெயினை தான் வாங்கி பயன்படுத்து வருகின்றோம். ஆனால் இதில் நமது முடிக்கு தேவையான சத்துக்கள் இருக்கிறதா.? என்பது பெரிய சந்தேகம் இருக்கிறது. ஆகவே இன்று முடி நீளமாக வளர எண்ணெய் தயாரித்து அப்ளை செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நீளமான முடி வளர:
முடி நீளமாக வளர தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை கலந்து தயாரிப்பதன் மூலம் முடியானது வேகமாக வளரச் செய்யும். அதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.
- ஆலிவ் எண்ணெய்
- நெல்லிக்காய்
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் உங்களின் முடிக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெய் தயாரிப்பு:
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு ஆலிவ் எண்ணெயினை சேர்த்து அதில் 2 அல்லது 3 துண்டு நெல்லைகையினை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு இந்த எண்ணெயினை நன்றாக ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும்.
1 வாரம் கழித்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை வாரத்திற்கு 2 முறை என மசாஜ் செய்து தலைகுளித்து வருவதன் மூலம் முடி நன்றாக வேகமாக வளரும்.
நரை முடி கருப்பாக மாற இந்த எண்ணெய் மட்டும் போதும்
முடி வளர கருஞ்சீரக எண்ணெய்:
கருஞ்சீரக பொடியினை தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் முடி நீளமாக வளருவதோடு மட்டும் இல்லாமல் முடி நன்றாக கருமையாகவும் வளர செய்யும்.
- கருஞ்சீரக பொடி- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
கருஞ்சீரக எண்ணெய் தயாரிப்பு:
முதலில் ஒரு பாட்டிலில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயினை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த எண்ணையுடன் 1 ஸ்பூன் கருஞ்சீரக பொடியினை சேர்த்து 3 நாட்கள் வரை வைத்து விட வேண்டும்.
3 நாட்கள் கழித்த பிறகு நீங்கள் எப்போது இந்த எண்ணெயினை பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அப்போது சிறிது இந்த எண்ணெயினை சூடு படுத்தி ஆற வைக்க வேண்டும்.
பின்பு ஆற வைத்த எண்ணெயினை முடியில் நன்றாக மசாஜ் செய்து தலைக்கு குளித்து வருவதன் மூலம் முடி நீளமாகவும், கருமையாகவும் வளரும்.
தலைமுடி கிடுகிடுவென நீளமாக வளர என்ன செய்யலாம் தெரியுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |