முடி உதிர்வை தடுத்து வேகமான முடி வளர்ச்சிக்கு இயற்கையான கை வைத்தியம் என்ன ?

Advertisement

வேகமான முடி வளர்ச்சிக்கு

ஆரோக்கியமான, கருமையான பளபளப்பான கூந்தலை நாம் அனைவரும் விரும்புவோம். ஆனால் அந்த கருமையான அடர்த்தியான கூந்தல் நம்மில் பலருக்கு கனவாகத்தான் உள்ளது. சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அடர்த்தியான முடி உதிர்ந்து வாழ் போன்ற தோற்றத்தில் காணப்படும். அதனால் பலருக்கு மனஉளைச்சல்கள் ஏற்படும்.நமது கூந்தலை முறையான பராமரிப்பின்  மூலம் இழந்த பழைய கூந்தலை நம்மால் கொண்டுவர முடியும். இன்று உள்ள சுற்றுசூழல் மாசுபடும் நமது கூந்தல் உதிர்வில் முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் ஒரு சில இயற்கை பொருட்களால் நமது முடி உதிர்வை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் கடைபிடித்த வழக்கங்களை நாமும் பின்பற்றினால் நமது முடி உதிர்வை படிப்படியாக குறைத்து கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெறலாம். வாருங்கள் அந்த இயற்கை பொருட்கள் என்ன?, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி உதிர்வை குறைந்து வேகமான முடி வளர்ச்சிக்கு:

இன்றைய அவசர காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடும் ஆரோக்கியமற்ற உணவு முறையும் நமது ஆரோக்கிய குறைபாட்டிற்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. இதுவே தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கும் காரணமாகிறது. முடி உதிர்வை குறைக்க ஒரு ஆரோக்கியமான குறிப்பு உங்களுக்காக…

மூலிகை எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • நெல்லிக்காய்
  • வெந்தயம்
  • கற்றாழை ஜெல்
  • கரிசலாங்கண்ணி
  • செம்பருத்தி இலை
  • செம்பருத்தி பூ
  • மருதாணி இலை
  • கருவேப்பிலை
  • வேப்பிலை
  • கருஞ்சீரகம்
  • எலுமிச்சை சாறு

மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை:

hair growth uses of home remedies

முதலில் ஒரு கனமான கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மிதமாக சூடுபடுத்தி கொள்ளவேண்டும்.

பின்னர் தேங்காய் எண்ணெயில், கருஞ்சீரகம், வெந்தயம், சின்ன வெங்காயம், நெல்லிக்காய், செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, மருதாணி இலை மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான வெப்பத்தில் கொதிக்க விடுவும்.

அவற்றின் நிறம் மாறிய உடன் கரிசலாங்கண்ணி இலைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அதனுடன் கற்றாழை ஜெல்லினை சேர்க்கவும்.

கடைசியாக வேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.

பின்னர் அதனை ஆற விட்டு முடிபோட்ட ஒரு பாத்திரத்தில் வடிகட்டி மூலிகை எண்ணையை பாதுகாக்கவும்

இந்த எண்ணையை வாரத்திற்கு 2 முறை தலையில் நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து குளித்தால் நீங்கள் எதிர்பார்த்தமாதிரியான முடி வளர்ச்சியை பார்க்கலாம்.

முடி உதிர்வு குறைந்து, உங்களின் முடி வேகமாக வளரும்.

இயற்கையான சரும பொலிவுக்கு 5 வழிகள்…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement