முகத்தில் உள்ள மங்கு மறைய டிப்ஸ் | Mangu Maraiya Tips in Tamil
பெரும்பாலும் பெண்கள் முதல் அனைவருக்கும் வரக்கூடியது மங்கு ஆகும். மங்கு என்பது பெயர் Melasma என்று சொல்லப்படுகிறார்கள். மங்கு என்பது ஒரு நோய் இல்லை, முகத்தில் தோன்றும் கரும்புள்ளி என்று சொல்லலாம். இது ஒழங்கற்ற மாதவிடாய் அல்லது ஹோர்மோன்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மங்கு ஏற்படுகிறது. இது சருமத்தில் மச்சம் போல ஆரம்பித்து வேகமாக பரவி விடும், அதனால் மங்குவை தடுப்பதற்கு இந்த பதிவை முழுவதுமாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
மங்குவை நீக்குவதற்கு எளிமையான டிப்ஸ் | மங்கு போவதற்கு மருந்து:
வில்வக்காய் :
முகத்தில் உள்ள மங்கு நீங்குவதற்கு வில்வக்காய் பயன்படுத்த வேண்டும். முதலில் வில்வக்காயை நறுக்கி கொள்ளவேண்டும். பிறகு அதனை மிக்ஸியில் போட்டு காய்ச்சாத பால் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும். இப்பொழுது அரைத்த பேஸ்டை முகத்தில் மங்கு உள்ள இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இதனை 1 மணி நேரம் காய வைக்கலாம் அல்லது இரவு நேரத்தில் பூசி கொண்டு காலையில் எழுந்து கழுவ வேண்டும். இதன் மூலம் மங்குவை சரி செய்யலாம்.
நித்தியமல்லி :
நித்யமல்லி பூக்களை சருமத்தில் மங்கு நீங்குவதற்கு பயன்படுத்தலாம் தெரியுமா? ஆமாங்க நித்யமல்லி இலைகளை சுத்தமாக தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள். அதனை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைக்க வேண்டும். அரைத்த இதழுடன் வெண்ணெய் அல்லது பாலை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை இரவு நேரத்தில் மங்கு இருக்கும் இடத்தில் அப்ளை செய்து, காலையில் எழுந்து நீரை கொண்டு கழுவவும். பிறகு ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்து குளிப்பதால் மங்கு குறைய தொடங்கி விடும்.
கசகசா :
கசகசா 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு, அதனுடன் வேப்பங்கோட்டையை இடித்து இரண்டையும் கலந்து கொள்ளவும். மேலும் அதில் 5 துளசி இலைகளை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். இப்பொழுது பேஸ்ட் தயார், இதனுடன் பாசிப்பருப்பு மாவை கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 2 மணி நேரம் அப்படியே உலர வைக்கலாம். இல்லையெனில் இரவு நேரத்தில் அப்ளை செய்து கொண்டு மறுநாள் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் மங்கு மறைந்து முகம் பொலிவாக மாறிவிடும்.
கஞ்சி நீர் :
நாம் சாதத்தை வடிக்கும் காஞ்சியில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறது. காஞ்சி நீர் சருமத்திற்கு நல்ல பொலிவை தரும். சாதம் வடித்த காஞ்சி நீரை எடுத்து கொள்ளுங்கள், அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்பொழுது பேஸ்ட் தயார். இதனை மங்கு இருக்கும் இடத்தில் மசாஜ் செய்து வந்தால் மங்கு மறைவதை உணர்வீர்கள். இதனை 2 வேளை செய்ய வேண்டும்.
முகத்தில் கருமை நிறத்தை நீக்கி அழகு தரும் சார்கோல் சோப்
திப்பிலி :
திப்பிலி ஒரு சிறந்த நாட்டு மருந்தாக இருக்கிறது. முதலில் வறுத்துக்கொள்ளவும் பிறகு அதனை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். பிறகு அதனுடன் தேனை நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் அப்ளை செய்து, 2 மணி நேரம் அப்படியே உலர வைக்க வேண்டும், பிறகு முகத்தை நல்ல வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வருவதால் மங்கு நீங்கி விடும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |