மரவள்ளி கிழங்கு அடை செய்வது எப்படி | Maravalli Kilangu Adai Recipe in Tamil
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி தோசை இட்லி என்று சாப்பிட்டு போர் அடித்துவிட்டால் இது செய்து சாப்பிடுங்கள். எப்போதும் கடைகளின் ஓரங்களில் விற்கும் கிழங்குகளை வாங்கி வந்து இந்த அடை செய்வார்கள். எப்படி செய்வார்கள் என்று அனைவருக்கும் கேள்வி இருக்கும். அதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மரவள்ளிக்கிழங்கு அடை செய்முறை:
முதலில் மரவள்ளிக்கிழங்கில் உள்ள தோள்களை சீவி இது போல் பொடியாக சீவி எடுத்துக் கொள்ளவும். அது அப்படியே வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் 2 கப் அரிசி, 1/2 கப் கடலை பருப்பு 1/2 துவரம் பருப்பு, கொஞ்சமாக உளுத்தம் பருப்பு சேர்த்து கூடவே 5 பட்டை மிளகாய் சேர்த்து ஊறவைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். அது கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு இந்த மரவள்ளிக்கிழங்கு சீவி வைத்துள்ள அதையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
அப்படியே ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். 1/4 ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு கலந்து தனியாக வைக்கவும்.
ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். அதன் கூடவே 2 பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். இது கூடவே கேரட் துருவி சேர்த்துக் கொள்ளவும். இது அனைத்தும் வதங்கியதும் கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்துக் கொள்ளவும். கூடவே பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளவும்.
அவ்வளவு தான் தோசை கல்லை அடுப்பில் வைத்து அடுப்பு சூடானதும் அதில் ஒவ்வொன்றாக தோசை போல் போட்டு எண்ணெய் விட்டு எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சுவை சும்மா அள்ளும்.
எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |