முகத்தில் உள்ள மரு மறைய டிப்ஸ்
சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. சில பேர் பருக்கள் அதை அப்படியே விட மாட்டார்கள். பொழுதினைக்கும் அந்த பருக்கள் மேலயே கையை வைத்து கொண்டிருப்பார்கள். இதனால் பருக்கள் உள்ள இடமானது கரும்புள்ளிகளாக மாறிவிடும். இதை தாண்டிய பிரச்சனை என்றால் மருக்கள் தான். இந்த மருக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவை அசிங்கமாக இருக்கும். அதனால் இந்த பதிவில் மருக்களை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எப்படி சரி செய்வது என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மருக்கள் நீங்க வினிகர்:
வினிகர் ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளவும், பின் காட்டன் பால்ஸ் எடுத்து கொள்ளவும். இந்த காட்டன் உருண்டையில் வினிகரை நனைத்து கொள்ளவும். இதனை மருக்கள் உள்ள இடத்தில் வைத்து மேல் ஒரு காட்டன் துணியை வைத்து கட்டி விட வேண்டும்.
இதனை ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும், மறுநாள் காலையில் எடுத்து விட வேண்டும். இது போல தொடர்ந்து 5 நாட்கள் செய்து வாருங்கள் மருக்கள் நீங்குவதை நீங்களே காண்பீர்கள்.
மருக்கள் நீங்க வாழைப்பழ தோல்:
வாழைப்பழ தோலை மட்டும் எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் வைக்க வேண்டும், அதன் மேலே ஒரு BANDAGE அல்லது துணியை வைத்து கட்டி விட வேண்டும்.
இதனை அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட வேண்டும். மறுநாள் காலையில் எடுத்து விட வேண்டும். இது போல தொடர்ந்து2 நாட்கள் செய்து வாருங்கள் மருக்கள் நீங்கி விடும்.
கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.!
மருக்கள் நீங்க பூண்டு:
பூண்டில் ஆன்டிபாக்ட்ரியல் என்பதால் மருக்களை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது.
5 பற்கள் பூண்டை எடுத்து தோல் உரித்து கொள்ளவும். பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ளவும். இதனை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை மருக்கள் உள்ள இடத்தில் வைத்து அதன் மேலே BANDAGE அல்லது துணியை வைத்து கட்டி விட வேண்டும்.
இதனை அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட வேண்டும். மறுநாள் காலையில் எடுத்து விட வேண்டும். இது போல தொடர்ந்து2 நாட்கள் செய்து வாருங்கள் மருக்கள் நீங்கி விடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |