மருதாணி ஹேர் டை செய்முறை – Maruthani Hair Dey in Tamil
இன்றைய லைப்ஸ்டையில் நரை வயதானவர்களுக்கு மட்டும் வரும் பிரச்சனையாக இல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கூட வரும் பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஒழுங்கற்ற வாழ்க்கை மற்றும் உணவுமுறை மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது. நரை என்றதும் இதற்கு உடனடி தீர்வாக இருப்பது ஹேர் டை என்று மக்கள் அனைவரும் முடிவெடிக்கின்றன, இதனால் பலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் அதிக ரசாயனம் கலந்த டையை வாங்கி பயன்படுத்துகின்றன இதனால் பக்க விளைவுகளையும் சந்திக்கின்றன. குறிப்பாக சரும அரிப்பு, எரிச்சல், தடிப்பு, புற்றுநோய் உட்பட ஏராளமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆக இயற்கையான வழிமுறையை பின்பற்றுவது தான் மிகவும் சிறந்த வழியாகும். எனவே பக்கவிளைவுகள் ஏதுமின்றி இயற்கை முறையில் வீட்டிலேயே எளிமையாக தயாரிக்க கூடிய அதே சமயம் தலைமுடிக்கும் கருமை தர கூடிய இயற்கை ஹேர் டை தயார் செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
- மருதாணி – இரண்டு கைப்பிடியளவு
- காபி தூள் – இரண்டு ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1/2 பழம்
- கிராம்பு – மூன்று
- மிளகு – 10
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முடி உதிர்வுக்கு பாய் பாய் சொல்லிட்டு முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க..
மருதாணி ஹேர் டை செய்முறை:
அடுப்பில் ஒரு பவுல் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், பின் அவற்றில் இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக 5 நிமிடம் கொதிக்கவைக்கவும். பிறகு அதனை வடிகட்டி நன்றாக ஆறவைக்கவும்.
பின்பு ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு கைப்பிடியளவு மருதாணி,10 மிளகு, மூன்று கிராம்பு மற்றும் வடிகட்டி வைத்துள்ள டீத்தூள் கஷாயத்தை ஊற்றி நன்கு பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பவுளிற்கு மாற்றி அதனுடன் அரை எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து மிக்ஸ் செய்யுங்கள் பின் 10 நிமிடம் வரை காத்திருக்கவும். 10 நிமிடம் கழித்து இந்த கலவையை தலை முழுவதும் அப்ளை செய்யுங்கள், பிறகு ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசலாம், இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் போதும் ஒரு மாதத்திலேயே உங்களுக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்..! இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |