மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

Advertisement

Mudi Adarthiyaga Valara Oil 

முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றும் அனைவரும் அவர் அவருக்கு பிடித்த மாதிரியான எண்ணெயினை உபயோகப்படுத்தி வருவார்கள். அதிலும் சிலர் வீட்டிலேயே எண்ணெய் தயாரித்து பயன்படுத்துவார்கள். மற்ற சிலர் மெடிக்கல் ஷாப் மற்றும் பியூட்டி பார்லரில் உள்ள எண்ணெயினை வாங்கி உபயோகப்படுத்துவார்கள். என்ன தான் நீங்கள் இது மாதிரி பயன்படுத்தி வந்தாலும் கூட அவற்றில் இருந்து முழுமையான பலனை பெற முடிவது இல்லை. அதனால் இன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் வெந்தயத்தை வைத்து எப்படி முடியினை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வைப்பது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்:

வெந்தயத்தில் உள்ள சத்துக்கள்

வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் D, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புசத்து மற்றும் சோடியம், கலோரிகள் என பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

அதனால் இத்தகைய சத்துக்கள் அடங்கியுள்ள வெந்தயத்துடன் மேலும் சில பொருட்களை சேர்த்து எண்ணெய் தயாரித்து எப்படி அப்ளை செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  • எண்ணெய் – 100 மில்லி 
  • ஆமணக்கு எண்ணெய் – 50 மில்லி  
  • வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
  • கருஞ்சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்

Life Style👇👇 எண்ணெய் வழியும் முகத்தை கூட பளபளப்பாக மாற்றலாம்..

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை:

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொண்டு அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து தூளாக அரைத்து கொள்ள வேண்டும்.  பின் அதே மிக்சி ஜாரில் கருஞ்சீரகம் 3 டேபிள் ஸ்பூன் போட்டு அதையும் தூளாக அரைத்து வெந்தயத் தூளுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடையினை வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில்லி ஆமணக்கு எண்ணெய் ஊற்றி இரண்டையும் கலந்து சிறுது நேரம் சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு எண்ணெய் சூடானதும் ரைத்து வைத்துள்ள வெந்தயம் மற்றும் கருஞ்சீரக பொடியினை போட வேண்டும். அடுப்பில் உள்ள எண்ணெய் நன்கு பொங்கி வரும். 20 நிமிடம் அடுப்பை குறைத்து வைத்து எண்ணெயை கொதிக்கவிட வேண்டும்.

கடைசியாக எண்ணெய் கொதித்ததும் அதனை நன்றாக ஆற விட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை:

தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை குளிக்க செல்லும் 2 மணி நேரத்திற்கு முன்பாக தலையில் நன்றாக அப்ளை மற்றும் மசாஜ் செய்து அதன் பிறகு தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும்.

மேலும் வாரம் 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

Life Style👇👇 கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement