2 மடங்கு வரை தலைமுடி அடர்த்தியாக வேகமாக வளர இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Mudi Adarthiyaga Valara Tips in Tamil

இன்றைய காலத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முடியினை பராமரிக்கும் பிரச்சனை தான் அதிகமாக இருக்கிறது. ஏனென்றால் தலைக்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் எல்லாம் செயற்கை முறையில் தயாரிப்பதால் இவற்றை எல்லாம் நமது முடிக்கு சிறந்த வளர்ச்சியினை அளிப்பது இல்லை. முடி நீளமாக வளரவில்லை என்றால் அடர்த்தியும் படிப்படியாக குறைய தொடங்கிவிடும். அப்படி பார்க்கையில் பெண்களுக்கு எல்லா விதமான அழகினையும் கொடுப்பது என்னவோ தலை முடி தான். அப்படிப்பட்ட தலை முடியினை கொட்டவிடாமல் பார்த்துக்கொள்வது நாம் செய்ய வேண்டிய முதல் வேலை. ஆகையால் இன்று தலைமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் 2 மடங்கு வரை எப்படி வளர வைப்பது என்பது பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். எனவே பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தலைமுடி வளர செம்பருத்தி:

முடி வேகமாக வளர என்ன செய்யலாம்

  • கற்றாழை-1 துண்டு சிறியது
  • செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
  • செம்பருத்தி பூ- 5
  • வெந்தயம்- 2 ஸ்பூன்
  • எலுமிச்சை பழம்- 1 துண்டு

இப்போது நீங்கள் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் எடுத்து வைத்துகொள்ளுகள்.

முடி வேகமாக வளர என்ன செய்யலாம்:

முதலில் நீங்கள் 2 ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் வெந்தயத்தில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி கொள்ளுங்கள்.

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள செம்பருத்தி இலை, பூ மற்றும் கற்றாழையை நன்றாக தண்ணீரில் அலசி கொண்டு கற்றாழையை மட்டும் சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.

இப்போது ஒரு மிக்சி ஜாரில் செம்பருத்தி இலை, பூ, கற்றாழை மற்றும் வெந்தயம் என அனைத்து பொருளினையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்து விடுங்கள்.

கடைசியாக அரைத்த பொருளுடன் 1 துண்டு எலுமிச்சை பழத்தின் சாற்றினையும் ஊற்றி மீண்டும் ஒரு முறை அரைத்து எடுத்தால் போதும் தலைக்கு அப்ளை செய்ய ஹேர் பேக் தயார்.

ஹேர் பேக் பயன்படுத்தும் முறை:

தலைமுடி வளர செம்பருத்தி

தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை முடியில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.

இத்தகைய முறையினை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் முடி ஆனது அடர்த்தியாக வேகமாக வளரும்.

அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement