Mudi Adarthiyaga Valara Tips Tamil
நமது முன்னோர்களின் காலத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தலைமுடி சம்மந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே அனைத்து வகையான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதனை சரி செய்வதற்காக நாமும் பலவகையான கெமிக்கல் கலக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஷாம்பு போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். இவ்வாறு நமக்கு ஏற்பட்ட தலைமுடி பிரச்சனைகள் தற்காலிகமாக நீங்கி இருக்கலாம். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அவை திரும்பவும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் இயற்கையான முறையில் தலைமுடி பிரச்சனைகளை போக்கி நன்கு அடர்த்தியாக வளர உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி அடர்த்தியாக வளர டிப்ஸ்:
இயற்கையான முறையில் உங்களின் தலைமுடியை நன்கு நீளமாக வளர வைக்க உதவும் ஒரு சிறந்த குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- கொய்யா இலை – 10
- சின்ன வெங்காயம் – 20
- கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
கை, கால் முட்டியில் உள்ள கருமை நீங்க பாட்டி சொன்ன குறிப்பு இதுதான்
மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 10 கொய்யா இலை மற்றும் 20 சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும்:
பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
முகம் எப்போதும் பளபளப்பாக வச்சுக்க பாட்டி சொன்ன ரகசியம் என்னன்னு தெரியுமா
விளக்கெண்ணெய்யை கலக்கவும்:
அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய்யை கலந்து கொள்ளவும்:
இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்களின் தலைமுடியின் வேர்களில் படுமாறு தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வு குறைந்து நன்கு தலைமுடி வளர்வதை நீங்களே காணலாம்.
செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்
1 ரூபாய் கூட செலவு இல்லாமல் முகத்தை நிலவு போல் ஜொலிக்க வைக்க சர்க்கரை போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |