வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெறும் 7 நாட்களில் முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Updated On: October 10, 2023 7:12 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mudi Kottiya Idathil Mudi Valara Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலைமுடி உதிர்வது மற்றும் மீண்டும் அந்த இடத்தில் முடிவளராதது தான். அப்படி உங்களுக்கும் தலைமுடி உதிர்ந்து அந்த இடத்தில் மீண்டும் முடிவளரவில்லை என்று கவலைப்படுகிறீர்களா. இனிமேல் கவலை வேண்டாம் அதற்காக தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் தலைமுடி உதிர்வை நிறுத்தி அந்த இடத்தில் புதிதாக முடி வளர உதவும் எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்:

long hair

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வு தான். அதனை தடுப்பதற்கான எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. ஜடாமாஞ்சி வேர் – 4
  2. வேம்பாளம் பட்டை – 4
  3. காய்ந்த செம்பருத்தி பூ – 1 கைப்பிடி அளவு
  4. காய்ந்த நெல்லிக்காய் – 100 கிராம்
  5. காய்ந்த ஆவாரம் பூ – 20 கிராம்
  6. காய்ந்த மருதாணி இலை- 20 கிராம்
  7. வெட்டிவேர் – 20 கிராம்
  8. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி 

ஒல்லியாக உள்ள தலைமுடி அசுரவேகத்தில் வளர கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க

தயாரிக்கும் முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சூடுபடுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அதனை அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மூடிப்போட்ட கண்ணாடி பாத்திரத்தினுள் நாம் எடுத்துவைத்துள்ள 4 ஜடாமாஞ்சி வேர், 4 வேம்பாளம் பட்டை, 1 கைப்பிடி அளவு காய்ந்த செம்பருத்தி பூ, 100 கிராம் காய்ந்த நெல்லிக்காய், 20 கிராம் காய்ந்த ஆவாரம் பூ, 20 கிராம் காய்ந்த மருதாணி இலை மற்றும் 20 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் நாம் சூடுபடுத்தி வைத்துள்ள தேங்காய் எண்ணெயையும் ஊற்றிக்கொள்ளுங்கள். இதனை மூன்று முதல் நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால் நமது தலைமுடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் தயாராகிவிட்டது.

இதனை தினமும் தொடர்ந்து தலையில் தடவி வருவதின் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் தலைமுடி உதிர்வை நிறுத்தி தலைமுடி நன்கு வளர உதவிபுரியும்.

நீங்களே எனக்கா இவ்வளோ முடின்னு ஆச்சிரியப்படுகிற அளவிற்கு முடி வளர முருங்கைக்கீரை மட்டும் போதும்

7 நாட்களில் நரை முடியைக் கருப்பாக மாற்றலாம் ரொம்ப சிம்பிள் டிப்ஸ் இதை மட்டும் பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now