தலைமுடி உதிர்வை நிரந்தரமாக போக்க இந்த தண்ணீர் மட்டும் போதும்..!

Advertisement

Mudi Uthirvathai Thadukka Patti Vaithiyam

பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் பொதுவாக ஏற்படும் பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வு தான். அதனை சரியாக கவனிக்காமல்விட்டால் தலைமுடி உதிர்வு அதிகரித்து தலையில் வழுக்கை வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் உங்களுக்கும் தலைமுடி அதிகமாக உதிர்ந்தால் அதனை சரியாக கவனித்து வழுக்கை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்தவகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயன்படுத்தி தலைமுடி உதிர்வை குறைத்து வழுக்கை வராமல் தடுப்பதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்பதை அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mudi Uthirvathai Thadukka Tips in Tamil:

Mudi Uthirvathai Thadukka Tips in Tamil

நாம் அனைவருக்குமே தலைமுடி என்றால் மிக மிக அதிக அளவு பிடிக்கும் ஏனென்றால் நமது தலைமுடி தான் நமது மொத்த அழகினையும் மற்றவர்களுக்கு முதலில் காட்டுவது. அதனால் அதனை நாம் பார்த்து பார்த்து பராமரித்து கொள்வோம்.

ஆனாலும் இன்றைய சூழலில் நமது தலைமுடிக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் பலவகையான பிரச்சனைகளில் ஓன்று தான் தலைமுடி உதிர்வு பிரச்சனை. அதனால் தான் தலைமுடி உதிரும் பிரச்சனையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. ரோஸ்மேரி இலை – 8 டீஸ்பூன் 
  2. புதினா இலை – 2 கைப்பிடி அளவு 
  3. துளசி – 2 கைப்பிடி அளவு 
  4. தண்ணீர் – 2 கப்  

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் சட்டுனு நீங்க இதை ட்ரை பண்ணுங்க

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிடுங்கள். பின்னர் அதனுடன் 8 டீஸ்பூன் ரோஸ்மேரி இலை, 2 கைப்பிடி அளவு புதினா இலை மற்றும் 2 கைப்பிடி அளவு துளசி ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி நன்கு ஆற விடுங்கள்.

பயன்படுத்தும் முறை:

பின்னர் அதனை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி உங்களின் தலைமுடிகளின் வேர்களில் படுமாறு நன்கு ஸ்பிரே செய்துகொள்ளுங்கள். இதனை தலையில் ஸ்பிரே செய்வதற்கு முன்னால் நீங்கள் நன்கு தலை குளித்திருப்பது நல்லது.

இதனை ஸ்பிரே செய்த பிறகு நீங்கள் தலைக்கு குளிக்கவேண்டாம். இதனை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வதை தடுத்து நன்கு முடி வளர உதவிபுரியும்.

இதை ஒரு சொட்டு தடவுங்க போதும் முகம் பளிச்சென்று மாறும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement