Mudi Uthirvathai Thadukka Tips in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வதுதான். அதனை சரி செய்வதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் அவ்வளவு நல்ல பலனை அளித்திருக்காது. அப்படி உங்களுக்கும் இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனை உள்ளதா இனி கவலை வேண்டாம். உங்களின் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்து அதனை முற்றிலுமாக நீக்கி தலைமுடியை நன்கு வளரவைக்க உதவும் ஒரு சிறந்த எளிய குறிப்பினை பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். அதிலும் அனைவருக்கும் எளிதாக கிடைக்க கூடிய கொய்யா இலையை பயன்படுத்தி எவ்வாறு தலைமுடி உதிர்வை தடுப்பது என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Mudi Uthirvathu Nindru Mudi Valara Tips in Tamil:
நாம் அனைவருக்குமே நமது தலைமுடி நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் கட்டுவது நமது தலை முடி தான் அப்படிப்பட்ட நமது தலைமுடிக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் நமது மனம் மிகவும் வருத்தப்படும்.
அதனால் தான் தலைமுடி உதிர்வு பிரச்சனையை சரிசெய்து அதனை முற்றிலுமாக நீக்கி தலைமுடியை நன்கு வளரவைக்க உதவும் ஒரு சிறந்த எளிய குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- கொய்யா இலை – 10
- சின்ன வெங்காயம் – 20
- கடுகு எண்ணெய் – 2 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
நீங்களே எனக்கா இவ்வளோ முடின்னு ஆச்சிரியப்படுகிற அளவிற்கு முடி வளர முருங்கைக்கீரை மட்டும் போதும்
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 10 கொய்யா இலை மற்றும் 20 சின்ன வெங்காயம் ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு பசைபோல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதனை நன்கு வடிக்கட்டி அதிலிருந்து கிடைக்கும் சாற்றுடன் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
உங்களின் தலையில் தடவி 1/2 மணிநேரம் வைத்து பின்னர் தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்துவருவதன் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வு குறைந்து நன்கு தலைமுடி வளர்வதை நீங்களே காணலாம்.
7 நாட்களில் நரை முடியைக் கருப்பாக மாற்றலாம் ரொம்ப சிம்பிள் டிப்ஸ் இதை மட்டும் பண்ணுங்க போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |