Mudi Valara Enna Seiya Vendum
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களது அழகினை மிகவும் கவனமாக பராமரித்து கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக தங்களது அழகினை மற்றவர்களுக்கு முதன்மையாக காட்டுகின்ற தங்களது தலைமுடியை அதிக அளவு கவனத்துடன் பராமரித்து கொள்ள விரும்புவார்கள். அதனால் பலவகையான கெமிக்கல்கள் கலந்த ஷாம்பு, கண்டிஷனர், ஹேர் ஆயில் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். இவற்றால் நமது தலைமுடிக்கு அதிக அளவு பிரச்சனைகள் தான் வந்து சேரும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் நமது வீடுகளில் உள்ள பொருட்களை பயன்படுத்தி நமது தலைமுடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்கும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்.?
நாம் அனைவருக்குமே நமது அழகினை மற்றவர்களுக்கு முதன்மையாக காட்டுவது நமது தலைமுடி தான். அப்படிப்பட்ட தலைமுடிக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை வந்து அதனால் நமது தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் நமது மனம் மிகவும் வருத்தப்படும்.
அதனால் தான் இயற்கையான முறையில் நமது வீடுகளில் உள்ள பொருட்களை பயன்படுத்தி நமது தலைமுடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்கும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- பாசிப்பயிர் – 1 கப்
- தயிர் – 1/2 கப்
- முட்டை – 2
- முருங்கைக்கீரை – 1 கைப்பிடி அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
7 நாட்களில் நரை முடியைக் கருப்பாக மாற்றலாம் ரொம்ப சிம்பிள் டிப்ஸ் இதை மட்டும் பண்ணுங்க போதும்
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பாசிப்பயிரை முதல் நாள் இரவே தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு முருங்கைக்கீரை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1/2 கப் தயிர் மற்றும் 2 முட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை உங்களது தலையில் தடவி 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரண்டு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து 1 மாதங்கள் செய்து வருவதின் மூலம் உங்களின் தலைமுடியை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுகிற அளவிற்கு வளரும்.
உங்க முகம் தேவதை போல ஜொலிக்க இந்த மட்டும் போடுங்க போதும்
தலையில் ஒரு பேன், ஈறு கூட இல்லமால் போக்க பூண்டு மட்டும் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |