Mudi Valara Hair Oil
பெண்களை பொறுத்தவரை 2 விஷயங்களில் மற்றவர்களை பார்த்து கொஞ்சம் ஆசை அல்லது பொறாமை கொள்வார்கள். அதில் ஒன்று முடியின் நீளம் மற்றும் அடர்த்தி, மற்றொன்று முக அழகு. தன்னை விட வேறு ஒருவருக்கு முடி நீளமாக இருந்தால் அடுத்த 1 மாதத்திற்குள் எப்படியாவது அவர்களை விட வேகமாக முடியினை நீளமாக வளர வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இவ்வாறு நினைத்ததோடு மட்டும் இல்லாமல் அதற்கான முயற்சியாக பார்லருக்கு என்று வேறு ஏதேனும் ஹேர் ஆயிலினை பயன்படுத்துவார்கள். ஆனால் இனி நீங்கள் பார்லருக்கு செல்ல வேண்டாம், பணத்தினை செலவினையும் செய்ய வேண்டும். ஏனென்றால் இன்று முடியினை நீளமாக வளர வைக்கக்கூடிய ஹேர் ஆயில் எப்படி தயாரித்து அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள் நண்பர்களே..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தலை முடி வளர எண்ணெய்:
குறிப்பு- 1
- கருஞ்சீரகம்- 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய்- சிறிதளவு
மேலே சொல்லப்பட்டுள்ள 2 பொருட்களையும் முடி நீளமாகவும், கருமையாகவும் வளருவதற்கு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
எண்ணெய் தயாரித்தல்:
கருஞ்சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல் தலையில் முடி வளரச் செய்யவும், கருப்பாகவும் இருக்க உதவுகிறது. அதனால் முதலில் 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் எடுத்து மிக்சி ஜாரில் பொடியாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் பவுடராக அரைத்து வைத்துள்ள கஞ்சீரக பொடி மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து அப்படியே 2 நாட்கள் வரை மூடி வைத்து விடுங்கள். அவ்வளவு தான் முடியினை கருமையாகவும், நீளமாகவும் வளர வைக்கக்கூடிய தேங்காய் எண்ணெய் தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள எண்ணெயினை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பாக அடுப்பில் லேசாக சூடு செய்து ஆறவைத்து விட வேண்டும். பின்பு ஆறிய எண்ணெயினை தலையில் அப்ளை செய்து வைத்து சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலை குளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் தலை முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.
கொட்டிய இடத்தில் எல்லாம் தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரவைக்க இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும் |
குறிப்பு- 2
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- தேங்காய் எண்ணெய்- சிறிதளவு
இரண்டாவது குறிப்பாக கறிவேப்பிலை எண்ணெயினை தயார் செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய் தயாரித்தல்:
முதலில் பூச்சி எதுவும் இல்லாத கறிவேப்பிலையாக இருப்பதை பார்த்து 1 கைப்பிடி அளவு எடுத்துகொள்ள வேண்டும். பின்பு அந்த கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி 2 நாட்கள் வரை வெயிலில் காய வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயில் 100 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் காய வைத்துள்ள கறிவேப்பிலை இரண்டினையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து விட வேண்டும். பின்பு ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள கறிவேப்பிலை எண்ணெயினை தலையில் நன்றாக தடவி கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த எண்ணெயினை தலையில் மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து தலை குளித்து விடுங்கள்.
இத்தகைய முறையினை பின்பற்றுவதன் மூலம் தலையில் நரை முடி எதுவும் வராமல் நீளமாக வளரும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |