மெலிந்து காணப்படும் முடி அடர்த்தியாக இல்லங்க காடுபோல் வளர பாட்டி கூறிய ரகசியம்..!

Advertisement

Mudi Valara Tips at Home in Tamil

நமது முன்னோர்களின் காலத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தலைமுடி சம்மந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே அனைத்து வகையான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதனை சரி செய்வதற்காக நாமும் பலவகையான கெமிக்கல் கலக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஷாம்பு போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். இவ்வாறு நமக்கு ஏற்பட்ட தலைமுடி பிரச்சனைகள் தற்காலிகமாக நீங்கி இருக்கலாம். ஆனால் சில நாட்களுக்கு பிறகு அவை திரும்பவும் ஏற்பட்டிருக்கலாம். அதனால் இயற்கையான முறையில் தலைமுடி பிரச்சனைகளை போக்கி நன்கு அடர்த்தியாக வளர உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.. 

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்:

long hair

பொதுவாக ஒருவரின் அழகினை மற்றவர்களுக்கு முதலில் காண்பிப்பது அவரின் தலைமுடி தான் அப்படிப்பட்ட தலைமுடிக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் அது அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும். அதற்காக பல முறைகளையும் பின்பற்றி அலுத்து போகிருப்பார்கள்.

அதனால் தான் இயற்கையான முறையில் தலைமுடி பிரச்சனைகளை போக்கி நன்கு அடர்த்தியாக வளர உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. உளுந்து – 2 டேபிள் ஸ்பூன் 
  2. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கருஞ்சீரகம் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. செம்பருத்தி இலை – 1 கைப்பிடி அளவு 
  5. கருவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு 
  6. சாதம் வடித்த தண்ணீர் – தேவையான அளவு 
  7. வேம்பாளம் பட்டை – 1
  8. தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன் 

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம் அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

குறிப்பு செய்முறை:

long hair.jpg

முதலில் ஒரு கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் உளுந்து, 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து அதில் தேவையான அளவு சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி ஒருநாள் இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.

அடுத்து ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 வேம்பாளம் பட்டையை சேர்த்து ஒருநாள் இரவு முழுவதும் நன்கு ஊறவிடுங்கள்.

பின்னர் மறுநாள் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊறவைத்துள்ளவற்றை சேர்த்து அதனுடன் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலை, 1 கைப்பிடி அளவு கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் நாம் வேம்பாளை பட்டையை ஊறவைத்திருந்த எண்ணெயில் இருந்து 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை உங்களின் தலையில் தடவி 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலை முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

ஒல்லியாக உள்ள முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர பாட்டி கூறிய ரகசியம்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement