Ilamaiyaga Iruka Tips in Tamil
பெரும்பாலும் பெண்கள் முதல் ஆண்கள் வரை எல்லோரும் நினைப்பது, தன் முகம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதை தான். அதிலும் குறிப்பாக பெண்கள் வாழ்நாள் முழுவதும் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அவர்கள் கடைகளில் விற்கப்படும் பொருளை பயன்படுத்தி வருவார்கள் இதனால் ஒரு பயனும் இருக்காது. நாளடைவில் தோல்கள் சுருங்கும் நிலை எற்படும். அதனால் இயற்கையான பொருளை வைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க இன்றைய பதிவை முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குறிப்பு : 1
முதலில் ஒரு பவுலில் பாதாமை சேர்த்து 5 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். பிறகு ஊறிய பாதாமை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். பின்பு அரைத்த பாதாம் பேஸ்டுடன் 1 டேபுள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1/4 டேபுள் ஸ்பூன் பாலை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் வைக்கவும். பிறகு சூடான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தில் துடைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவதன் மூலம் எப்பொழுதும் இளமையாக இருக்கலாம்.
என்றென்றும் முகம் இளமையாக அப்படியே இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கள்…!
குறிப்பு : 2
முதலில் 15 பாதம் பருப்பு எடுத்து கொண்டு, அதனை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பாதம் பருப்பின் மேல் இருக்கும் தோலினை எடுத்து மிக்சியில் சேர்த்து அதனுடன் 1/4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதனை ஒரு வடிகட்டி கொண்டு அதன் சாற்றை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பின் வைட்டமின் ஈ மாத்திரையில் உள்ளே இருக்கும் ஜெல், 1 டேபிள் ஸ்பூன் பாதம் எண்ணெய் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனை தினசரி முகத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்து வருவதால் இளமையாக இருக்கலாம்.
குறிப்பு : 3
முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். பிறகு உருளைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி, அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு அரைத்து வைத்த உருளைக்கிழங்கை வடிக்கட்டி சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். அதனுடன் 1 டேபுள் ஸ்பூன் தயிர், 2 டேபுள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் கிளிசரினை சேர்த்து நன்றாக கலக்கவும். முகத்தை நன்றாக கழுவி விட்டு, செய்து வைத்த பேக்கை முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு தண்ணீரை ஊற்றி முகத்தை நன்றாக கழுவினால் முகம் இளமையாக இருக்கும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்ய வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |