உங்களின் முகம் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக இளமையா இருக்கனுமா..!

Advertisement

Mugam Ilamaiyaga Pasi Payaru  

பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முகத்தை எப்போதும் இளமையாகவும், அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு இது வெறும் ஆசையாக மட்டுமே முடிந்து விடும். மற்ற சிலர் இதற்கான முயற்சிகளை செயற்கை முறையில் செய்வார்கள். ஆனால் முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கி முகம் அழகாகவும், இளமையாகவும் இருக்க பாசிப்பயிறை எவ்வாறு பயன்படுத்து என்று இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாசிப்பயறு சத்துக்கள்:

பாசிபயிரில் கால்சியம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், புரதம், கொழுப்புசத்து மற்றும் நார்சத்து என பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.

பாசிப்பயறு மாவு முகத்திற்கு:

பாசிப்பயிறு

முதலில் கொரகொரப்பான பாசிப்பயிறு மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் கற்றாழை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு உங்கள் முகத்தில் தடவி மேல்நோக்கி ஸ்க்ரப் செய்யுங்கள். இவ்வாறு 3 நிமிடம் செய்து பிறகு முகத்தை கழுவி விடுங்கள். உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால் 1 நிமிடம் இதனை செய்தால் போதும். ஒருவேளை முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இதனை வாரம் 1 முறை அப்ளை செய்யலாம்.

நரைமுடியை கருமையாக்கும் டைக்கு குட் பாய் சொல்லுங்க..

முகம் பொலிவு பெற:

முகம் பொலிவு பெற

எப்போதும் Face Pack போடப்போகும் முதல் நாள் இரவே பாசிபயிரினை தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும். ஆகையால் பாசிப்பயிறை தண்ணீரில் ஊறவைத்து பிறகு ஊறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதனை முகத்தில்அனைத்து இடத்திலும் அப்ளை செய்து 15 அல்லது 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். மேலும் தினமும் பயன்படுத்தி வந்தீர்கள் என்றால் உங்கள் முகம் பொலிவாகவும் வெள்ளையாகவும் இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் இந்த பொருளை கலந்து தலையில் தடவி பாருங்க..

முகம் இளமையாக இருக்க:

பாசிப்பயறு மாவு முகத்திற்கு

முதலில் 1 ஸ்பூன் பாசிப்பயிறு பவுடர், 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு இதில் ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு இதனை முகத்தில் அப்ளை செய்து 3 அல்லது 4 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்து தண்ணீரால் முகத்தை கழுவி விடுங்கள்.

மேலும் நாம் பயன்படுத்தும் சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்துவதன் மூலமா உங்களின் முகம் என்று இளமையாக காணப்படும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement