Mugam Palapalakka Enna Seiya Vendum
பொதுவாக பெண்களும் சரி, ஆண்களும் சரி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதிலும் ஒரு சில பெண்கள் திருமணம் மற்றும் விசேஷங்கள் போன்ற நாட்களில் தம் முகத்தை அழகாக வைத்து கொள்ள ஆசைப்பட்டு அழகு நிலையம் அல்லது கடைகளில் விற்கக்கூடிய சோப்புகள் மற்றும் கிரீம் வகைகளை பயன்படுத்தி வருவதனால் நாளடைவில் முகம் பளபளப்பாக இல்லாமல் மங்க செய்கிறது. அதனால் எளிமையான பொருட்களை வைத்து முகம் பளபளப்பாக வைப்பதற்கு இந்த குறிப்பை முழமையாக பாருங்க.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ தினமும் குளிப்பதில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா இத்தனை நாள் தெரியாமே போச்சே
தேங்காய் பால் :
தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் தேனை கலந்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 5 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறி புத்துணர்ச்சி அடைய செய்கிறது.
தயிர் :
ஒரு பவுலில் நல்ல கெட்டியான தயிரை எடுத்து கலக்கி கொள்ளவும். அதனை முகம் முழுவதும் அப்ளை செய்து விடவும். இதை 15 நிமிடம் கழித்து கழுவினால் வறண்ட சருமம் பளபளப்பாக இருக்கும்.
ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெய் (அல்லது) தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனை எண்ணெயை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்க வேண்டும். இதன் மூலம் தோல் சுருக்கம் மற்றும் தோல் வறண்டும் காணப்பட்டால் சரி செய்து விடலாம்.
எலுமிச்சை சாறு :
நம் முகத்தில் ஏற்படும் முடிகளை அகற்றுவதற்கு எலுமிச்சை சாறு பெரிதும் பயன்படுகிறது. எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்து வருவதால் முகத்தில் ஏற்படும் முடிகளை அகற்றி முகம் அழகு பெறுகிறது.
தக்காளி பழம் :
தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி கொள்ளவும். தக்காளி பழத்தை முகம் முழுவதும் அப்ளை செய்து வரவும். இதனால் சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசை நீங்கி விடும்.
மஞ்சள் :
மஞ்சளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிக இருப்பதால் சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சருமத்தில் உள்ள கொலாஜன் என்ற உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.
முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். பிறகு கடலை மாவு 1/2 கப், மஞ்சள் தூள், பால் மற்றும் ரோஸ் வாட்டர் போன்ற மூன்று பொருளையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இதை 20 நிமிடம் வைத்து கொண்டு குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால், முகம் பளபளப்பாக இருக்கும்.
Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!
பால் :

பால் சருமத்தில் உள்ள டைரோசின் அளவை கட்டுப்படுத்தி சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. காய்ச்சாத சுத்தமான பசும்பாலை தினமும் முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து கழுவினால் முகம் பால் வெண்மை நிறத்தில் மாறிவிடும்.
கற்றாழை :
கற்றாழையில் வைட்டமின்கள் அதிகம் நிறைந்து உள்ளன. இது சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. முகத்தில் ஏற்படும் எந்த விதமான பிரச்சனைக்கும் கற்றாழை பெரிதும் உதவுகிறது.
கற்றாழை தோலினை சீவி எடுத்து உள் பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |