Mugam Polivu Pera Home Remedies in Tamil
இன்றைய சூழலில் உள்ள சுற்று சூழல் மாசுபாடு காரணமாக அனைவருக்குமே தங்களது அழகினை பராமரிப்பது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதிலும் நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் தெரிவது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் நமது மனம் மிக மிக வருத்தப்படும். அதனால் அதனை சரிசெய்ய தேவையான செயற்கையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து வெற்றியை தருவது இல்லை. அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி முகத்தை நன்கு பொழிவுபடுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும்..?
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது முகத்தை மிகவும் அழகாகவும் பொலிவாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- அரிசி – 1 கைப்பிடி அளவு
- உருளைக்கிழங்கு – 1
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
தலையில் ஒரு பேன், ஈறு கூட இல்லமால் போக்க பூண்டு மட்டும் போதும்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு அரிசியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவிடுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1 உருளைக்கிழங்கினை அதனின் தோலினை நீக்கிவிட்டு நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
உங்க முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்க கசகசா போதும்
ஸ்டேப் – 3
மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊறவைத்துள்ள அரிசி மற்றும் நறுக்கிவைத்துள்ள உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
இப்பொழுது அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை உங்களின் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து பிறகு உங்களின் முகத்தை நன்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள்.
இதனை வாரத்திற்கு இரு முறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |