Mugam Polivu Pera Home Remedies
பொதுவாக 6 வயதாக இருந்தாலும் இல்லை 60 வயதாக இருந்தாலும் சரி நம்முடைய முகமானது எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அப்படி பார்த்தால் நாம் என்ன செய்தாலும் நாம் நினைத்த மாதிரியான ஒரு முகப்பொலிவை எளிதில் பெறுவது என்பது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. அதிலும் இந்த கால தலைமுறையில் உள்ள மக்கள் முகத்திற்கு என்றும் தனியாக செலவு செய்து வருகிறார்கள். இவ்வாறு செலவு செய்து வருவதிலும் கூட நமக்கு சில மணி நேரத்திற்கான பலன்களே கிடைக்கிறது. அதனால் இன்றைய பதிவில் முகம் பொலிவுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பொலிவு பெற அழகு குறிப்புகள்:
குறிப்பு: 1
- பாதம் பருப்பு
- பால்
- ஓட்ஸ்
மேலே சொல்லப்பட்டுள்ள மூன்றினையும் முதலில் சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு பாதாம் பருப்பினை தூளாக செய்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பவுலில் தூள் செய்த பாதாம் பருப்பு, பால் மற்றும் ஓட்ஸ் என இவை அனைத்தினையும் நன்றாக கலந்து 5 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள்.
பிறகு 5 நிமிடம் கழித்து முகத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முகம் ஆனது நன்றாக பொலிவு பெற செய்யும்.
இந்த 3 பொருட்கள் போதும்.. முகம் நிலவு போல் ஜொலிக்க.
குறிப்பு: 2
- தயிர்
- அவோகேடா
முதலில் சிறிதளவு அவோகேடா பழத்தினை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பவுலில் செய்து வைத்துள்ள பேஸ்ட்டுடன் சிறிதளவு தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் வரை கலந்து வைத்துள்ள பேஸ்டை அப்படியே வைத்து விடுங்கள். பிறகு 5 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.
இத்தகைய முறையினை நீங்கள் மேற்கொள்வதன் மூலமாகவும் முகமானது நன்றாக பொலிவு பெற செய்யும்.
அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு இந்த எண்ணெய் போதுங்க…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |