முகம் நிலவு போல் பிரகாசமாக இருக்க தேனுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

Advertisement

Mugam Polivu Pera

இன்றைய காலகட்டத்தில் நமது முகம் நன்கு பொலிவுடன் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை பெண்கள் முதல் ஆண்களும் கண்டிப்பாக இருக்கும். அதனால் அதற்காக பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். அப்படி நமது முகமும் நன்கு பொலிவு பெறவேண்டும் என்று ஆசைப்படும் உள்ளவர்களுக்காக தான் இன்றைய பதிவு. இன்றைய பதிவில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரின் முகத்தில் உள்ள கருமையை போக்கி முகத்தை நன்கு பொலிவு பெற உதவிபுரியும் டிப்ஸினை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே அது என்ன டிப்ஸ் அதனை எவ்வாறு மேற்கொள்வது போன்ற தகவல்களை இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் பளிச்சென்று இருக்க என்ன செய்ய வேண்டும்.?

முகம் பொலிவு பெற

பொதுவாக நமது அழகினை மற்றவர்கள் பார்த்து பொறாமை படும் அளவிற்கு வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே இருக்கும்.

அதனால் அதற்கான பல முயற்சிகளை மேற் கொள்வோம். ஆனால் அவையாவும் நமக்கு நல்ல பலனை அளித்ததா என்றால் நமது பதில் பெரும்பாலும் இல்லை என்றே இருக்கும்.

எனவே தான் மிகவும் எளிமையான முறையில் உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. கடலைமாவு – 1 1/2 டீஸ்பூன் 
  2. காபித்தூள் – 1 டீஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன் 
  4. பால் – 2 டீஸ்பூன்
  5. தேன் – 1 டீஸ்பூன்

வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்

தயாரிக்கும் முறை:

முகம் பளிச்சென்று இருக்க

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 1/2 டீஸ்பூன் கடலைமாவு, 1 டீஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் பால் மற்றும் 1 டீஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனை உங்களின் முகத்தில் தடவி ஒரு 10 -15 நிமிடம் வைத்திருந்த பிறகு முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்துவருவதின் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கருமை நீங்கி நீங்கள் நன்கு பொலிவுடன் காணப்படுவீர்கள்.

சட்டுனு நரைமுடி கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

Advertisement