Mugam Sivappaga Enna Seiya Vendum
மனிதனாக பிறந்த அனைவருக்குமே முகம் ஆனது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் ஒருவரை நாம் அடையாளம் காண வேண்டும் என்றால் அதற்கு முகம் தான் அடிப்படையாக உதவி புரிகிறது. இப்படிப்பட்ட முகம் எப்போதும் பளிச்சென்றும், வெள்ளையாகவும் இருக்க வேண்டும் என்று நாம் என்ன என்னவோ செய்து வருகின்றோம். அந்த வகையில் பார்த்தால் நிறைய நபர்கள் தினமும் சரியாக சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் முகத்தை மட்டும் சரியாக பராமரித்து விடுவார்கள். மற்ற சிலர் இதற்கு எதிர்மறையாக முகத்திற்கு எந்த விதமான கிரீமும் அப்ளை செய்யமால் அப்படியே விட்டு விடுவார்கள். அதனால் இன்றைய பதிவில் முகம் வெள்ளையாக மாற கோதுமை மாவுடன் சில பொருட்களை கலந்து முகத்தில் அப்ளை செய்வது என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Face Whitening Tips at Home Naturally:
கோதுமைவினை நாம் பெரும்பாலும் வீட்டு சமையலுக்காக மட்டும் தான் பயன்படுத்துகின்றோம். ஆனால் கோதுமை மாவு சமையலுக்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கும் நல்ல பலனை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
ஆகையால் கோதுமை மாவு Face Pack செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
- கோதுமை மாவு- 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1 ஸ்பூன்
- பால்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 2 சொட்டு
- காட்டன் துணி
Life Style👇👇 1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க
ஃபேஸ் பேக் தயார்படுத்தும் முறை:
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பவுலில் 1 ஸ்பூன் பால், கோதுமை மாவு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் 2 சொட்டு எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு 10 நிமிடம் அப்படியே வைத்தால் போதும் ஃபேஸ் பேக் தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்து வைத்துள்ள கோதுமை மாவு ஃபேஸ் பேக்கினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்த பிறகு 3 சொட்டு பால் எடுத்து அதனை ஒரு காட்டன் துணியில் நனைத்து கொள்ள வேண்டும்.
கடைசியாக அந்த பால் நனைத்த துணியினை முகத்தில் மெதுவாக ஸ்க்ராப் செய்து விட்டு பின்பு குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.
Life Style👇👇எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..
பயன்கள்:
கோதுமை மாவில் கால்சியம், மாவுசத்து, புரதம், பாஸ்பரஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து, இரும்புச்சத்து, தாதுக்கள் மற்றும் நார்சத்து என பல வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது.
ஆகையால் இத்தனை சத்துக்கள் அடங்கியுள்ள கோதுமை மாவினை வைத்து முகத்தில் Face Pack போடுவதன் மூலம் முகம் பளிச்சென்றும், சிவப்பாகவும் மாறிவிடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |