Skin Whitening Tips at Home
முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. முக பளபளப்பு குறைவதோடு மட்டுமில்லாமல் மிரமும் மாறுகிறது. சில நபர்களுக்கு வெள்ளையாக இருப்பவர்களை பார்த்தால் பிடிக்கும். நம்ம மட்டும் ஏன் கடவுள் கருப்பாக படைத்தான் என்று நினைப்பார்கள். நாம் பிறக்கும் போது எந்த நிறமாக இருந்தாலும் வளர்ந்தவுடன் நாம் நினைத்தால் நிறத்தை அதிகரிக்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உடலை வெள்ளையாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகத்தை வெள்ளையாக மாற இயற்கையான அழகு குறிப்பு:
பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- ரோஜா இதழ்- ஒரு கைப்பிடி
- உப்பு- 1 தேக்கரண்டி
- பசும்பால்- 1 கப்
- லாவெண்டர் எண்ணெய்- 1 தேக்கரண்டி
பேக் செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். இதனை குளிப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்பூ உடல் முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இது போல் தொடர்ந்து செய்து வந்தால் உடல் முழுவதும் வெள்ளையாக மாறும்.
ரோஜா இதழானது முகத்தில் உள்ள பாக்ட்ரியாக்களை அழித்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மேலும் முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.
1 ரூபாய் செலவு இல்லாமல் முடியை ஸ்ட்ரைட்னிங் செய்யலாம் வாங்க
கிரீம் செய்ய தேவையான பொருட்கள்:
- பால்- 1 கப்
- வைட்டமின் ஈ மாத்திரை- 2
- கிராம் மாவு –2 டீஸ்பூன்
- தேன் –3 டீஸ்பூன்
- கிளிசரின்- 2 டீஸ்பூன்
- பாதாம் தூள் –3 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் –1 1/2 டீஸ்பூன்
- புதினா இலைகள் –10
கிரீம் செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 கப் பாலை ஊற்றி கொள்ளவும். பால் சூடான பிறகு வைட்டமின் ஈ மாத்திரை, கிராம் மாவு, தேன்,கிளிசரின், பாதாம் பவுடர், கொத்தமல்லி தூள், புதினா இலை போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பொருட்கள் அனைத்தும் பாலுடன் கலந்து கெட்டியான பதம் வரும் வரைக்கும் மிக்ஸ் செய்து கொள்ளவும். கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
இவை ஆறியதும் முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். முழு உடலிலும் இதனை அப்ளை செய்யலாம்.
எவ்வளவு முடி என்று வாயை பிளக்க வேண்டுமென்றால் இந்த எண்ணெயை தடவுங்க..
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |