Mugam Vellaiyaga Mara in Tamil
நம்முடைய முகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. அதாவது சிறு வயது, பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் போது, திருமணம் மற்றும் முதிர்வு நிலை என இதுபோன்ற மாற்றங்களுக்கு ஏற்ப மாறி வருகிறது. அதன் படி பார்க்கும் போது இத்தகைய வகையான பருவநிலை மாற்றங்களை நமது முகம் சந்தித்தாலும் கூட எந்த நேரத்திலும் முகப்பொலிவு என்பது அப்படியே இருக்க வேண்டும் என்பதை தான் நாம் விரும்புகிறோம். இத்தகைய நிலையினை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான Face பேக் மற்றும் கிரீம் என இவற்றை எல்லாம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இனி நீங்கள் இது மாதிரி செலவு எதுவும் செய்திடாமல் முகத்தை பளிச்சென்றும், வெள்ளையாகவும் மாற்றுவது எப்படி என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகத்திற்கு கடலை மாவு:
கடலை மாவு என்பது முகத்தில் சிறந்த ஒரு ரெமிடியாக இருக்கிறது. ஆகையால் கடலை மாவுடன் சில பொருட்களை சேர்த்து கலந்து தடவுவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறிவிடும்.
- கடலை மாவு- 1/2 ஸ்பூன்
- காபி தூள்- 1/4 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் எடுத்துவைத்துள்ள மூன்று பொருளினையும் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் முகத்தை பளபளப்பாக மாற்றக்கூடிய ரீமிடி தயார்.
மேலும் இந்த ரெமிடியை நீங்கள் தயார் செய்யும் போது தண்ணீரை பயன்படுத்தக்கூடாது.
பயன்படுத்தும் முறை:
இரவு தூங்க செல்வதற்கு முன்பாக முதலில் முகத்தினை கழுவி விடுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள ரெமிடியை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
பின்பு 10 நிமிடம் கழித்து முகத்தினை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். இவ்வாறு வாரம் 1 முறை அல்லது தினமும் செய்வதன் மூலம் பொலிவிழந்த முகத்தினை பொலிவு பெற செய்து முகத்தினையும் வெள்ளையாக மாற்ற உதவுகிறது.
முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க வேண்டுமா.!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |