Mugam Vellaiyaga Mara Tips in Tamil
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகம் பொலிவிழந்து காணப்படுவது என்பது தான் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இதற்கு காரணம் அவர்களின் உடல் அமைப்பு, இன்றைய சூழலில் உள்ள சுற்று சூழல் மாசுபாடு மற்றும் உணவு முறை ஆகியவை தான். அப்படி உங்களின் முகமும் பொலிவிழந்து காணப்படுகின்றது என்று கவலைப்படும் நபரா நீங்கள் அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு நிலவு போல் பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் சிவப்பழகு பெற என்ன செய்ய வேண்டும்..?
நமது முகம் பொலிவிழந்து காணப்பட்டது என்றால் நமது மனம் மிகவும் கஷ்டப்படும். அதனால் தான் மிகவும் எளிமையான முறையில் நமது முகத்தை மிகவும் அதிக அளவு பொலிவு பெற செய்யும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
வெறும் 2 பொருள் போதும் உங்களின் முகம் 2 மடங்கு பொலிவு பெற
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு அழகாகவும் பொலிவுடனும் மாற ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
மின்னல் வேகத்தில் தலைமுடி வளர வெறும் 3 பொருள் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |