ஒரே நாளில் முகம் வெள்ளையாக உருளைக்கிழங்கு மட்டும் போதும்..!

Advertisement

Mugam Vellaiyaga Mara Tips Tamil

அன்றாடம் நம் சாப்பிடும் சாப்பாட்டில் என்ன தான் வித விதமான சமையல் இருந்தாலும் கூட உருளைக்கிழங்கு இல்லை என்றால் அது முழுமை அடையவே அடையாது என்று தான் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என அனைவரும் கூறுவார்கள். அப்படி பார்த்தால் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், நீர்சத்து மற்றும் புரதசத்து என நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் அடங்கி உள்ளது.  இத்தனை சத்துக்கள் அடங்கிய உருளைக்கிழங்கை நாம் வெறும் உணவில் மட்டுமே சேர்த்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் உருளைக்கிழங்கு நமது உடலுக்கு மட்டும் இல்லாமல் முகத்திற்கு எண்ணற்ற பலன்களை அளிக்கிறது. அதனால் இன்று உருளைக்கிழங்கை வைத்து எப்படி முகத்தை வெள்ளையாக மாற்றுவது என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உருளைக்கிழங்கு அழகு குறிப்புகள்:

உங்களது முகத்தை வெள்ளையாக மாற்ற முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளை எடுத்துவைத்துகொள்ளங்கள்.

  1. உருளைக்கிழங்கு- 1/2 
  2. முட்டை- 1
  3. கஸ்தூரி மஞ்சள்தூள்- 1 ஸ்பூன்
  4. சிவப்பு சந்தனப்பொடி- 1 ஸ்பூன்
  5. பாதாம் ஆயில்- 1 ஸ்பூன்
  6. பேபி ஆயில்- 1 ஸ்பூன்

உருளைக்கிழங்கு அழகு குறிப்புகள்

இப்போது உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டாக நறுக்கி அலசி விட்டு பின்பு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு 1 முட்டையில் இருக்கும் வெள்ளை கருவை மட்டுமே தனியாக மற்றொரு பவுலில் எடுத்து விடுங்கள். இதனை தொடர்ந்து தனியாக எடுத்து வைத்துள்ள வெள்ளை கருவை உருளைக்கிழங்குடன் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள்.

2 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் மற்றும் 1 ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வரை கலந்து விடுங்கள்.

கடைசியாக 1 ஸ்பூன் பாதாம் ஆயில் மற்றும் பேபி ஆயிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது முகத்தை வெள்ளையாக மாற்றக்கூடிய Face பேக் தயார்.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் தயார் வைத்துள்ள Face பேக்கை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே வைத்து விடுங்கள். பின்பு 20 நிமிடம் கழித்து சாதாரணமான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.

இவ்வாறு செய்தால் போதுமானது உங்களது முகம் விரைவில் வெள்ளையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement