Skin Whitening Cream at Home in Tamil
அனைவருக்குமே நம் முகம் அழகாகவும் கொஞ்சமாவது வெள்ளையாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் என்ன செய்வது சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையானபராமரிப்புமின்றி முகம் பொலிவிழந்து கருமையாக மாறிவிடும். இதனை சரி செய்ய பலருக்கு இக்காலத்தில் நேரம் இருப்பதில்லை. தினமும் சாப்பாடு செய்து வேலைக்கு எடுத்துட்டு போறதே பெரும்பாடாக இருக்கும் இக்காலத்தில் எப்படி முகத்தை பொலிவுடன் பராமரிப்பது. முகத்தை பொலிவாக வைக்க வேண்டுமென்றால் ஏதாவதொரு பேஸ் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் நேரம் இல்லாதவர்கள் என்ன செய்வது.? இனி அந்த கவலை வேண்டும்.. ஒரு நிமிஷம் போதும் உங்கள் முகம் வெள்ளையாக.. அது எப்படி என்றுதானே கேட்குறீர்கள்..? வாருங்கள் அதனை பற்றி தெளிவாக பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Face Whitening Cream Homemade in Tamil:
தேவையான பொருட்கள்:
- சர்க்கரை – 3 ஸ்பூன்
- கற்றாழை ஜெல் – 3 ஸ்பூன்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரினை எடுத்து கொள்ளுங்கள். அதில், 3 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து பவுடர் போல் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் அரைத்து வைத்த சர்க்கரை 2 ஸ்பூன் மற்றும் கற்றாழை ஜெல் 3 ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள்.
இவை இரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இப்போது , முகத்தை வெள்ளையாக்கக்கூடிய மசாஜ் கிரீம் ரெடி..!
முகத்தில் உள்ள எல்லா பருக்களும் ஒரே இரவில் முழுசா போகணுமா.. அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க..!
பயன்படுத்தும் முறை:
முதலில் முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு, தயார் செய்து வைத்துள்ள மசாஜ் கிரீமை எடுத்து முகத்தின் எல்லா பகுதியிலும் நன்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, கையை வைத்து 1 நிமிடம் வரை நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். 1 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை நன்கு கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள், தினமும் 1 நிமிடம் செய்து வந்தால் போதும் ஒரே மாதத்தில் நீங்களே எதிர்பாராத அளவிற்கு முகம் வெள்ளையாக மாறிவிடும்.
உங்க முகம் எப்படிங்க இவ்வளவு வெள்ளையாச்சு கேட்பாங்க.. பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தினால்..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |