Mugathil Ulla Karumai Neenga Tips
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி எப்போதும் முக அழகுடனும், முகம் [பளிச்சென்றும் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படி பார்த்தால் இவை இரண்டுமே பலரது கனவாகவே மாறி விடுகிறது. ஏனென்றால் என்ன தான் தினமும் நமது முகத்தினை ஓரளவாவது பராமரித்து வந்தாலும் கூட முகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது.
அதுவும் குறிப்பாக முக்கருமை, பருக்கள், கருவளையம் என இதுபோன்ற பிரச்சனைகளை பற்றி சொல்ல வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகள் சிறிதாக இருந்தாலும் கூட காலப்போக்கில் நமது முகத்தின் பாதிக்கும் அளவிற்கு முடிந்து விடுகிறது. அதனால் இன்று முகத்தில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றான முகத்தில் உள்ள கருமை நீங்க நாம் செய்ய வேண்டிய இயற்கையான வழிகளை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகத்தில் உள்ள கருமை நீங்க என்ன செய்ய வேண்டும்:
உங்களது முகத்தில் வரும் பருக்களே கரும்புள்ளிகளாகவும், கருமையாகவும் மாறி விடுகிறது. ஆகையால் இன்று முகத்தில் இருக்கும் கருமை நீங்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தான் கீழே விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.
குறிப்பு- 1
- எலுமிச்சை பழம்
- சர்க்கரை
முதலில் ஒரு பவுலில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்கொண்டு அதனுடனே எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும்.
5 நிமிடம் கழித்து நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கலவையினை முகத்தில் நன்றாக அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் காணப்படும் இறந்த செல்கள் நீங்கி மற்றும் கருமையும் நீங்கி முகம் நன்றாக பொலிவுடன் இருக்கும்.
முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம்
குறிப்பு- 2
- பால்
- ரோஸ் வாட்டர்
இந்த பேக்கினை நீங்கள் செய்வதற்கு நீங்கள் காய்ச்சாத பாலை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் முதலில் பெரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் காய்ச்சாத பால் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்றாக 5 முதல் 10 நிமிடம் வரை கலந்து விடுங்கள்.
அடுத்தப்படியாக கலந்து வைத்துள்ள பேக்கினை முகத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக அப்ளை செய்து அப்படியே விட்டு விடுங்கள். காலையில் எழுந்து குளிர்ந்த நீரினால் முகத்தினை கழுவி விடுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் உங்களது முகம் கருமை நீங்கி பளிச்சென்றும், அழகாகவும் இருக்கும்.
முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர வெறும் 30 நாட்கள் மட்டுமே போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |