Mugathil Ulla Pallangal Maraiya
நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தாலும், அதிகமாக இருப்பது தலைமுடி பிரச்சனையும் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனையும் தான். இந்த அவசர காலகட்டத்தில் அதனை நாம் சரியாக கவனிக்கலாம் நாளடைவில் பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது. அதாவது, அனைவருமே முகத்தை அழகாக வைத்து கொள்ளத்தான் விரும்புவார்கள். ஆனால், சுற்றுசூழல் உள்ளிட்ட பல்வேறு காரணத்தினால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் பருக்கள் போன்றவை ஏற்படுகிறது. இந்த சரும பிரச்சனைகளில் பெரும்பாலானவர்கள் சந்திப்பது முகப்பரு பிரச்சனை தான். அதற்கு அடுத்ததாக முகத்தில் உள்ள பள்ளங்கள்… இப்படி பல சரும பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
முகத்தில் பள்ளங்கள் ஏற்பட்டால் எண்ணெயையும் வியர்வையையும் வெளியிட்ட வன்னம் இருக்கும். இதனால் முக அழகே கெட்டுவிடுகிறது. எனவே, இதனை தடுக்கக்கூடிய எளிய வீட்டு முறையை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Natural Remedy for Face Holes in Tamil:
முட்டையின் வெள்ளை கரு:
முதலில், ஒரு தூய்மையான கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில், முட்டையின் வெள்ளைக்கருவை 1 ஸ்பூன் அளவிற்கு எடுத்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அடுத்து, முகத்தை நன்றாக கழுவி துடைத்துவிட்டு, முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தின் பள்ளங்கள் உள்ள பகுதி முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடம் வரை உலரவிட்டு, அதன் பிறகு, வெறும் தண்ணீர் மட்டும் கொண்டு முகத்தை நன்கு கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் தினமும் ஒருவாரம் பயன்படுத்தி வந்தால் போதும்.. முகத்தில் உள்ள பள்ளங்கள் எளிதில் மறைந்துவிடும்.
வெள்ளரிக்காய் பேஸ்ட்:
வெள்ளரிக்காயில் சிறிய பகுதியை வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.. இதனை பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்து, முகத்தை நன்றாக கழுவி துடைத்துவிட்டு, வெள்ளரிக்காய் பேஸ்ட முகத்தின் பள்ளங்கள் உள்ள பகுதி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் அல்லது 30 நிமிடம் வரை உலர வைத்து அதன் பிறகு, முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.இந்த முறையை நீங்கள் பயன்படுத்திய நாட்களில் இருந்தே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லை முகத்தில் பள்ளங்கள் உள்ள இடத்தில அப்ளை செய்து 5 நிமிடம் வரை மசாஜ் செய்து விடுங்கள். அதன் பிறகு, 15 நிமிடம் வரை உலர வைத்து குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு நீங்கள் தினமும் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைந்து விடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |