தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருப்பாக மாற இந்த ஒரு ஸ்ப்ரே போதும்..!

Advertisement

Narai Mudi Karumaiyaga

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நரைமுடி வருவது இயற்கையான ஒன்று. ஆனால் இப்போது சிறு வயதிலேயே பெரும்பாலானோருக்கு நரைமுடி வருகிறது. பொதுவாக நரைமுடி வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணம் மரபு வழி அதாவது பரம்பரை பரம்பரையாக நரைமுடி வருவது தான். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நரைமுடி இருந்தால் அது அடுத்தடுத்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ஆனால் இது தவிர பல காரணங்கள் உள்ளது. அதாவது, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உடல்நல பிரச்சனைகள் போன்றவற்றாலும் நரைமுடி ஏற்படுகிறது. எனவே நரைமுடியை முற்றிலும் கருமையாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies For White Hair in Tamil:

Home Remedies For White Hair in Tamil

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காய தோல் – 1 கைப்பிடி 
  • நெல்லிக்காய் பவுடர் – 1 ஸ்பூன் 
  • டீ பவுடர் – 1/2 ஸ்பூன்
  • தண்ணீர் – 1 1/2 டம்ளர்

தயாரிக்கும் முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

அதில் சின்ன வெங்காயம்  தோல், நெல்லிக்காய் பவுடர் மற்றும் டீ பவுடர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

அதாவது, ஊற்றிய 1 1/2 டம்ளர் தண்ணீர் 3/4 டம்ளர் அளவிற்கு வற்றும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.

 narai mudi karupaga eppadi

வித்தியாசமான முறையில் பழங்களின் தோலை பயன்படுத்தி செய்த ஹேர் டை.. 100% ரிசல்ட் தரக்கூடியது

இதனை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து கொள்ளுங்கள். இந்த ஸ்ப்ரேயினை நரைமுடி உள்ள இடத்தில் நன்கு ஸ்ப்ரே செய்து 1 மணிநேரம் வரை வைத்து கொள்ளுங்கள்.

அதன்பிறகு, எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலசி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் நரைமுடி எளிதில் கருப்பாக மாறிவிடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement