Narai Mudi Karupaga Mara Tips in Tamil
நரை முடி பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலவகையான விஷயங்களையும், குறிப்புகளையும் பின்பற்றுகிறீர்களா? இருப்பினும் அவற்றில் எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லையா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது. ஆம் அன்பர்களே இங்கு நரைமுடி கருமையாக ஒரு அருமையான ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம்.
சரி வாங்க அந்த ஹேர் டை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும். எப்படி தயார் செய்ய வேண்டும் என்று என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- ஒரு பெரிய பீட்ரூட்டின் தோல்
- கரிசலாங்கண்ணி பவுடர் – ஒரு ஸ்பூன்
- நெல்லிக்காய் பவுடர் – ஒரு ஸ்பூன்
- மருதாணி இலை – இரண்டு கையளவு
- டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
- அவுரி பொடி – ஒரு ஸ்பூன்
- உப்பு – ஒரு சிட்டிகை
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100% நரைமுடி கருமையாக இயற்கை ஹேர் டை செய்முறை..!
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் ஒரு பீட்ரூட்டின் தோல், ஒரு ஸ்பூன் கரிசலாங்கண்ணி, ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், மருதாணி இலை இரண்டு கையளவு டீத்தூள் இரண்டு ஸ்பூன் மற்றும் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ள்ளுங்கள்.
பிறகு அதனை வடிகட்டி அவற்றில் இருக்கும் ஜூஸை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் வடிகட்டி வைத்திருக்கும் ஜூஸை சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவும். குறைந்தபட்சம் 10 நிமிடம் வரை கொதிக்கவிடுங்கள் அப்பொழுது இடைவிடாது ஒரு கரண்டியை பயன்படுத்தி கிளறி விடுங்கள்.
கலவையானது நன்கு பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிடவும்.
கலவையானது நன்கு ஆறியதும் மூடி போட்டு இரண்டு மணி நேரம் வரை நன்கு ஊறவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து அதனை வேறொரு பவுளிற்கு மாற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் அவுரி பொடி மற்றும் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து மிக்ஸ் செய்தால் போதும் ஹேர் டை தயார்.
பயன்படுத்தும் முறை:
தயார் செய்த ஹேர் டையை தலையில் எங்கெல்லாம் நரை முடை இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்யுங்கள். பிறகு ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தலை அலசவும்.
பயன்கள்:
இந்த ஹேர் டையை ஒரு முறை தலைக்கு அப்ளை செய்தாலே போதும் குறைந்தது ஒரு மாதம் வரை நல்ல பயன் தரும் ஆக ஒரு மாதத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் டையை தயார் செய்து தலைக்கு பயன்படுத்தினாலே போதும். அனைவரும் இந்த ஹேர் டையை தலைக்கு தலைக்கு அப்ளை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரிப்பு முறை.. மாதம் 2 முறை போதும் முடி கருப்பாகவே இருக்கும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |