Narai Mudi Karupaga Mara
இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பம் போன்றவற்றினால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தலை முடி சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனை என்றால் நரை முடி பிரச்சனை தான். அதனால் இந்த நரை முடியை மறைக்க மற்றும் போக்க நாமும் கடைகளில் விற்கப்படும் ஹேர் ஆயில், ஹேர் டை போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவோம். இவற்றை எல்லாம் வாங்கி பயன்படுத்துவதால். அந்த சமயத்திற்கு நல்ல பலனை அளிக்கும் ஆனால் நிரந்தரமான தீர்வை தராது. அதனால் இன்றைய பதிவில் உங்கள் வீட்டிலேயே எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நரை முடிக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நரை முடி கருப்பாக மாற:
உங்கள் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களை பயன்படுத்தி எளிமையான மற்றும் இயற்கையான முறையில் நரை முடிக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு விரிவாக காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
10 நிமிடத்தில் வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மற்ற கருஞ்சீரகம் ஒன்று போதும்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து விட்டு சேர்த்து நன்கு வறுத்து கொள்ளுங்கள். எந்த அளவிற்கு என்றால் அது நன்கு கருகும் அளவிற்கு வறுத்து கொள்ளுங்கள்.
பிறகு நாம் வறுத்து வைத்திருந்த கருவேப்பிலையை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு சலித்து அதனை ஒரு மூடி போட்ட கண்ணாடி பாத்திரத்தில் கொட்டி வைத்து கொள்ளுங்கள்.
வெறும் 7 நாட்களில் முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க போதும்
இப்பொழுது இந்த பொடியில் இருந்து 2 டேபிள் ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
பின்னர் அதனை உங்கள் தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் ஒரு முறை என்று மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரை முடிகளும் மறைய ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
ஒல்லியாக உள்ள தலைமுடி அசுரவேகத்தில் வளர கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |