Narai Mudi Poga Tips in Tamil
பொதுவாக இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனை போக்குவதற்காக நீங்களும் பல வேதிப்பொருட்கள் கலந்த ஷாம்பு மற்றும் Hair Dye போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். அவையாவும் நிரந்தரமான தீர்வை அளிக்குமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. இவற்றை ஒரு முறை பயன்படுத்தினால் சில காலங்களுக்கு மட்டுமே உங்களின் தலைமுடி கருப்பாக இருக்கும். பின்னர் மீண்டும் நரைமுடி வந்து விடும். ஆனால் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் குறிப்பு இயற்கையான முறையில் உங்களின் நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்ற உதவும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் நரைமுடியை கருமையாக மாற்றி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நரை முடி கருப்பாக மாற:
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் வயதானவர்களுக்கு கூட நரைமுடி என்று ஒன்று இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நரைமுடி என்ற ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கின்றது.
அதனால் அதனை மிகவும் எளிமையான முறையில் போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- பாதாம் – 30
- காபி தூள் – 6 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
உங்க முகம் தேவதை போல ஜொலிக்க இந்த மட்டும் போடுங்க போதும்
செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 30 பாதாமினை ஒருநாள் இரவு முழுவதும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு ஊறவிடுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் நன்கு வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 6 டேபிள் ஸ்பூன் காபி தூளினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு இதில் உள்ள சாற்றினை மட்டும் நாம் முன்னரே பாதாம் சாற்றினை வடிகட்டி வைத்துள்ளோம் அல்லவா அதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
இந்த கலவை நன்கு சூடு ஆறியவுடன் நமது தலையில் தடவி 15 முதல் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் ஒரு முறை என தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் நீங்கிவிடுவதை நீங்களே காணலாம்.
தலையில் ஒரு பேன், ஈறு கூட இல்லமால் போக்க பூண்டு மட்டும் போதும்
உங்க முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்க கசகசா போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |