ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!

Advertisement

Natural Face Beauty Tips in Tamil | பாதாம் பிசின் அழகு குறிப்புகள்

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் அழகாக பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக நமக்கு மிகுந்த அழகினை சேர்ப்பது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தை  நம்மால் சரியாக பராமரிக்க முடிவதில்லை. இதற்க்கு காரணம் இன்றைய அவசர காலகட்டம் மற்றும் நமக்கு உள்ள அதிக அளவு வேலைகள் தான். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அனைவருக்குமே பயன்படும் வகையில் மிகவும் எளிமையான முறையில் நமது முகத்தை பளிச்சென்று மற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Home Remedies For Glowing Skin in One Day in Tamil:

Home Remedies For Glowing Skin in One Day in Tamil

இயற்கையான முறையில் உங்களின் முகத்தை ஒரே ஒரு நாளில் பளிச்சென்று மற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க. அதற்கு முன்பு இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் காணலாம்.

  1. பாதாம் பிசின் – 1 டேபிள் ஸ்பூன்
  2. சப்ஜா விதை – 1 டேபிள் ஸ்பூன்
  3. சந்தனம்- 1 டேபிள் ஸ்பூன்
  4. வைட்டமின் ஈ கேப்சூல் – 2

5 நிமிடத்தில் எந்த ஒரு வலியும் இல்லாமல் அக்குள் பகுதியில் உள்ள முடிகளை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

பாதாம் பிசினை ஊறவைக்கவும்:

  • முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசினை தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒருநாள் இரவு முழுவதும் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

சப்ஜா விதையை எடுத்து கொள்ளவும்:

  • அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதையையும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஒருநாள் இரவு முழுவதும் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள்.

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள்:

  • இப்பொழுது ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊறவைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பிசின், 1 டேபிள் ஸ்பூன் சப்ஜா விதை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சந்தனம் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.
  • பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.

வைட்டமின் ஈ கேப்சூலை கலக்கவும்:

  • அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் ஈ கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனை உங்களின் முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்கு குளிர்ந்த நீரால் நன்கு கழுவி கொள்ளுங்கள்.
  • இதனால் உங்களின் முகம் ஒரே நாளில் பளிச்சென்று மாறுவதை நீங்களே காணலாம்.

உங்களின் முகம் முதல் பாதம் வரை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற இந்த 4 வழிமுறைகளை மட்டும் பயன்படுத்துங்க போதும்  

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement