Natural Face Brightening Tips in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முரண்பாடான உணவு முறையின் காரணமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அவர்களின் முகம் பொலிவிழந்து காணப்படுவது தான். அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை ஜொலிக்க வைக்க நீங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் நல்ல பலனை அளித்திருக்குமா.? என்றால் உங்களில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி அது வெறும் 2 பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு உங்களின் முகத்தை நன்கு ஜொலிக்க வைப்பது என்பதற்கான ஒரு குறிப்புகளை காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Face Brightening Tips in Tamil:
பொதுவாக நாம் அனைவருக்குமே நமது முகம் எப்பொழுதும் மிகவும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்க்கான பலவகையான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவையாவும் சில நாட்களுக்கு அல்லது சில மணிநேரங்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும்.
அதனால் தான் இயற்கையான முறையில் நமது முகத்தை மிகவும் பொலிவு பெற செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- கடுக்காய் பொடி – 1 டீஸ்பூன்
- முல்தானி மெட்டி – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 1/2 டம்ளர்
மின்னல் வேகத்தில் தலைமுடி வளர வெறும் 3 பொருள் போதும்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் கடுக்காய் பொடியையும் சேர்த்து நாம் ஊற்றிய 1/2 டம்ளர் தண்ணீர் 1/4 டம்ளர் ஆகும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள். பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
இதனை உங்களின் முகத்தில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக கொள்ளுங்கள். இதனை தினமும் தொடர்ந்து உங்களின் முகத்தில் தடவி வருவதன் மூலம் உங்களின் முகம் 2 மடங்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.
15 நாட்களில் உங்களின் நிறத்தை அதிகரிக்க இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |