Ulunthu Face Pack in Tamil | உளுந்து அழகு குறிப்புகள்
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய முகத்தை எப்போதும் அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் அதற்கு மாறாக முகம் பொலிவிழந்து இருக்கிறது. ஏனென்றால் வெயிலின் தாக்கம், சுற்றுசூழல் மாசுபாடு போன்ற பல காரணங்களால் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் ஏற்படுகிறது. எனவே முகத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பது அவசியம். அந்த வகையில் அனைவருக்கும் பயனுள்ள வகையில், இயற்கையான பொருட்களை பயன்படுத்தி முகத்தை எப்படி பளபளப்பாக வைப்பது என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
How To Make Face Pack At Home For Glowing Skin in Tamil:
நாம் உளுந்தை பயன்படுத்தி இரண்டு வகையான பேஸ் பேக் தயார் செய்ய போகிறோம். இந்த இரண்டு பேஸ் பேக்குகளையும் நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பயன்படுத்த வேண்டும். இப்போது முதலில் பேஸ் பேக் 1 எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
பேஸ் பேக் 1:
பேஸ் பேக் 1 செய்ய தேவையான பொருட்கள்:
- உளுந்து- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
உளுந்தினை எடுத்து கொள்ளவும்:
முதலில் உளுந்தை கழுவி விட்டு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
முகத்தில் உள்ள பள்ளங்களை நீக்குவதற்கு வேப்பிலை மட்டும் போதும்..
தேன் சேர்க்கவும்:
பிறகு, இதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை முகத்தில் அப்ளை செய்து 3 அல்லது 4 நிமிடங்கள் வரை நன்றாக ஸ்க்ரப் செய்து விடுங்கள்.
பிறகு இதனை, 10 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்து விட்டு பின்பு தண்ணீர் பயன்படுத்தி முகத்தை கழுவி விடுங்கள்.
பேஸ் பேக் 2:
பேஸ் பேக் 2 செய்ய தேவையான பொருட்கள்:
- உளுந்து- 2 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள்- 1/4 ஸ்பூன்
பேஸ் பேக் 2 செய்யும் முறை:
உளுந்தினை எடுத்து கொள்ளவும்:
முதலில் உளுந்தை கழுவி விட்டு 15 நிமிடம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
முல்தானி மெட்டியை சேர்க்கவும்:
பிறகு, இதனுடன் தேன், முல்தானி மெட்டி, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இதனை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.
மேற்கூறிய இந்த இரண்டு பேஸ் பேக்கையும் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அப்ளை செய்து வருவதன் மூலம் உங்கள் முகம் வெண்மையாகவும், பளபளப்பாகவும் மாறுவதை பார்க்கலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |