1 மாதம் ஆனாலும் வெள்ளை முடி வெளியே தெரியாமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க போதும்..!

Advertisement

இந்த ஹேர் டையை மட்டும் அப்ளை பண்ணுங்க மாச கணக்கில் உங்க முடி கருமையாக இருக்கும் – Natural Hair Dye For Black Hair

வெள்ளை முடி வந்துவிட்டது என்றால் பெரும்பாலானவர்களுக்கு நமக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்று நினைப்பார்கள். ஒருவேளை உங்களுக்கு 40 அல்லது 50  வயதிற்கு மேல நரை வருகிறது என்றால் வயதாகி கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் டீனேஜி வயதில் நரை வருகிறது என்றால் கண்டிப்பாக அதற்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். டீனேஜி வயதில் ஒருவருக்கு நரைமுடி வருகிறது என்றால் அவர்களுக்கு உடலில் வைட்டமின்கள் குறைவாக இருக்கலாம், அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். இது தவிர உங்களுக்கு மரபணு பண்புகள், தைராய்டு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினால் நரைமுடி பிரச்சனை வரும். ஆக இதனை இயற்கையான முறையில் கருமையாக மாற்று ஒரு அருமையான ஹேர் டை தயார் செய்யும் முறையைத்தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குறைப்பு:

இந்த ஹேர் டையை இரவில் தயார் செய்யுங்கள், அப்பொழுது தான் மறுநாள் பயன்படுத்துவதற்கு சரியாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • காபி தூள் – இரண்டு ஸ்பூன்
  • இரும்பு கடாய் – ஒன்று
  • நெல்லிக்காய் பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • மருதாணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – இரண்டு ஸ்பூன்
  • அவுரி இலைப்பொடி – இரண்டு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே நாளில் 2 மடங்கு பொலிவுக்கு வீட்டில் உள்ள இந்த 2 பொருள் போதுங்க..

தயார் செய்யும் முறை:முடி கருமையாக

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும். காபி டிக்காஷன் நன்கு கொதித்ததும் அடுப்பை அனைத்துவிடலாம்.

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைய்யுங்கள், கட்டாயம் இரும்பு கடாய் தான் பயன்படுத்த வேண்டும்.

இரும்பு கடாய் நன்கு சூடானதும் முதலில் நெல்லிக்காய் பவுடரை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு பிரவுன் நிறத்திற்கு வரும் வரை வறுக்கவும், பின்பு அதனுடன் மருதாணி பவுடரை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கருகி வரும் வரை வறுக்கவும், இது போன்று மருதாணி பவுடரையும் அவற்றில் சேர்த்து நன்கு கருகி வரும் வரை வறுக்கவும்.

பின்பு கொதிக்க வைத்துள்ள காபி டிகாஷனை ஒரு டம்ளர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளுங்கள். (மீதம் இருக்கும் காபி டிகாஷனை கீழே ஊற்றிவிட்டு வேண்டாம் அடுத்த நாள் பயன்படுத்திக்கொள்ளலாம் ஆக பத்திரமாக ஸ்டரோ செய்து வைத்துக்கொள்ளுங்கள்)

பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறினை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள், அவ்வளவு தான் பிறகு அந்த இரும்பு கடாயை ஒரு பிளேட் போட்டு மூடி ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

மறுநாள் காலை அல்லது நீங்கள் மறுநாள் எப்பொழுது தலை குளிக்க சென்றாலும் சரி அப்பொழுது இந்த இரும்பு கடாயில் உள்ள கலவையில் இரண்டு ஸ்பூன் அவுரி பவுடர் செய்து மீதம் உள்ள காபி டிகாஷனை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலவையை மிக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஹேர் டை தயார் இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும். பிறகு தலைக்கு நீங்கள் எப்பொழுதும் போல ஷாம்பு போட்டு அலசலாம். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் போதும் உங்கள் நரை முடியின் நிறம் கருமையாக மாறுவதை நீங்கள் உணருவீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளிபோன்ற மினு மினுப்பான முகத்திற்கு வெறும் 3 பொருள் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement