முடி கிடுகிடுவென வளர கற்றாழையில் பாட்டி சொன்ன இந்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

முடி நீளமாக வளர பாட்டி வைத்தியம்

அனைவருடைய வீடுகளில் தாத்தா மற்றும் பாட்டி இருப்பார்கள். அவர்கள் எப்போதும் நமது உடல் ஆரோக்கியத்தை பற்றியும், கல்வி பற்றியும் பேசி கொண்டே இருப்பார்கள். அதிலும் குறிப்பாக பாட்டியை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனென்றால் பாட்டிக்கு இவை இரண்டினையும் விட நமது முடியிம் மீது தான் அதிகப்படியான அக்கறை என்பது இருக்கும். ஆனால் பாட்டி நமக்கு சொல்லும் ஹோம் ரெமிடியை நாம் ட்ரை செய்யாமல் கடைகளில் விற்கும் பொருளினை தான் வாங்கி பயன்படுத்துவோம். ஒரு சிலருக்கு பாட்டி சொன்ன வைத்தியத்தை ட்ரை செய்யாமல் என்றால் கூட அது என்ன என்று தெரியாமலே இருக்கிறது. அதனால் இன்று முடி கிடுகிடுவென வேகமாக வளர பாட்டி சொன்ன வைத்தியம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கபோகிறோம். உங்களுக்கும் முடி நீளமாக வளர வேண்டும் என்று ஆசை இருந்தால் பதிவை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

முடி அடர்த்தியாக நீளமாக வளர:

கற்றாழையில் வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2, கால்சியம், சோடியம், மாங்கனீசு, பொட்டாசியம், குளோரின் என இத்தகைய சத்துக்கள் அனைத்தும் இதில்  காணப்படுகிறது. அதனால் கற்றாலையினை வைத்து ஜெல் தயார் செய்து முடிக்கு அப்ளை செய்வது முடியின் வளர்ச்சியினை அதிகரிக்க செய்யும்.

  1. கற்றாழை ஜெல்- சிறிய துண்டு
  2. தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

முடி அடர்த்தியாக நீளமாக வளர

முதலில் எடுத்து வைத்துள்ள கற்றாழையினை சுத்தம் செய்து அதன் உள்ளே இருக்கும் ஜெல்லினை எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு ஒரு மிக்சி ஜாரில் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பவுலில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரைக் கலந்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள கலவையினை முடியின் வேர்க்கால்களில் படுமாறு அப்ளை செய்து விடுங்கள். இவ்வாறு அப்ளை செய்வதன் மூலம் முடியின் வளர்ச்சி ஆனது வேர்களில் இருந்து அதிகரிக்கும்.

ஒரு கைப்பிடி கடுகு போதுங்க உங்களின் கடுமையான பணத்தட்டுப்பாடு குறைய …

தலையில் அப்ளை செய்த ஜெல் 2 மணி நேரம் வரை அப்படியே இருக்கட்டும். பின்பு 2 மணி நேரம் கழித்து தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி தலை அலசிவிடுங்கள்.

இத்தகைய முறையினை வாரம் 2 முறை செய்து வந்தால் போது முடி அடர்த்தியாகவும், வேகமாகவும் வளர ஆரம்பிக்கும்.

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்! அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement