மத்தவங்க முடிக்கு என்னங்க தடவுறீங்கன்னு கேப்பாங்க..! அந்தளவுக்கு முடி வளரும்..!

Advertisement

Natural Hair Growth Tips

வணக்கம் பிரண்ட்ஸ்..! ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி உடல் ரீதியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அதாவது, முடி கொட்டுவது, முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நரை முடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகிறேன். இந்த பிரச்சனைகள் நம் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் இந்த பிரச்சனையை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதைவிட்டு நாம் கடைகளில் கிடைக்கும் இரசாயனம் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி  பயன்படுத்துகிறோம். இப்படி செய்வதால் எந்த பயனும் கிடையாது. அந்த வகையில் இன்று இயற்கையான முறையில் முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முடி அடர்த்தியாக வளர எண்ணெய்:

கருவேப்பிலை

  1. தேங்காய் எண்ணெய் – 100 ml 
  2. வெந்தயம் – 1/2 கப்
  3. கருவேப்பிலை – 2 கைப்பிடி அளவு

கருவேப்பிலையில் இருக்கும் நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். முடியின் வளர்ச்சியை அதிகபடுத்தும் பண்புகள் கருவேப்பிலையை இருக்கிறது. இது முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது. மேலும் முடியை கருமையாக வளர செய்யும். வெந்தயம் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர செய்யும். மேலும் இது பொடுகு தொல்லையை அடியோடு விரட்டுகிறது. 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா.. ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்:

கருவேப்பிலை பொடி

முதலில் ஒரு மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும். பின் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெந்தயத்தை போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து கருவேப்பிலை 2 கைப்பிடி அளவு போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அவ்வளவு தான் இதை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை அடுப்பில் வைக்கவும்

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் தேங்காய் எண்ணெய் 100 ml அல்லது உங்களுக்கு தேவையான அளவு ஊற்றி கொள்ளுங்கள். பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை மற்றும் வெந்தயத்தை போட வேண்டும்.

கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

எண்ணெய் பொங்கி வர ஆரம்பிக்கும். அதனால் ஒரு கரண்டியை வைத்து கலந்துவிட வேண்டும். எண்ணெயை நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

அவ்வளவு தான் இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே வியந்து பார்ப்பீர்கள்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement