ஆரோக்கியமான கூந்தலுக்கு வீட்டு வைத்தியம்
பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நீளமான முடி வளர்ச்சிக்கு வீட்டு வைத்தியம்:
ஆரோக்கியமான உணவு :
ஆரோக்கியமான உணவுமுறை நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் நமது முடி உதிர்வை குறைத்து முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது பச்சை காய்கறிகள் பழங்கள் கீரைகள் பால் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ளவேண்டும்.
தண்ணீர்:
அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் நமது முடிக்கு தேவையான தாதுக்கள் வைட்டமின்கள் கூடுதலாக கிடைக்கும். அதன் மூலம் உங்கள் முடியின் வளர்ச்சி மேம்படும்.
உங்கள் முடியின் பராமரிப்பு முக்கியம். முடிக்கு பயன்படுத்தும் எண்ணெய் முதல் ஷாம்பு வரை முடிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
முடி பராமரிப்பிற்கான சில Tips :
முட்டை
முட்டைகளை கூந்தல்களில் பயன்படுத்துவதால் மென்மையை தலைமுடியை பெறலாம். முட்டையின் மஞ்சள் கருவை இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலையில் மசாஜ் செய்து விட்டு குறைந்தது 10 நிமிடங்கள் வரை உலர்த்திவிட்டு பிறகு தலை குளித்தல் உங்கள் முடி மென்மையாகவும் நீண்ட வளர்ச்சியையும் கொண்டு இருக்கும். முட்டையில் உள்ள வைட்டமின்கள் உங்கள் கூந்தலுக்கு சிறந்த வளர்ச்சியை தரும்.
ரோஸ்மேரி எண்ணெய்:
ரோஸ்மேரி இலைகளைப் பயன்படுத்தி தலைமுடிக்கு நல்ல கன்டிஷ்னர் தயாரித்து பயன்படுத்தினாலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் ரோஸ்மேரி இலைகளை சேர்த்து அது நன்கு கொதித்ததும் அதை வடிகட்டி ஆறவிடுங்கள்.
இந்த நீரை வழக்கமாக நீங்கள் தலைக்கு குளித்ததும் தலையை கன்டிஷ்னர் பயன்படுத்திவிட்டு அலசுவது போல இந்த நீரை பயன்படுத்தலாம்.
ரோஸ்மேரி எண்ணெய்க்கு உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் என்றால், நீங்கள் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை சேர்த்து உச்சந்தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்கலாம்.
செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |