இதை மட்டும் ஒரு டீஸ்பூன் தடவுங்க போதும் உங்க முகம் நிலவு போல் ஜொலிக்கும்..!

Advertisement

Natural Home Remedies for Fair Skin in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகத்தை நன்கு பொலிவுடன் மற்றும் நன்கு பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் உலகம் மிகவும் அவசரமாக இயங்கி கொண்டிருக்கிறது. அதனால் நீங்களும் இந்த உலகிற்கேற்ப அவசரமாக தான் இயங்க வேண்டும்.

இந்த நிலையில் எங்கு உங்களுக்கு உங்களின் அழகினை பராமரித்து கொள்வதற்கு நேரம் கிடைக்க போகின்றது. அதனால் இன்றைய சூழலில் யாருமே தங்களின் அழகினை சரியாக பராமரித்து கொள்வதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் எளிமையான முறையில் உங்கள் முகத்தை பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

Permanent Skin Whitening Tips in Tamil:

Permanent Skin Whitening Tips in Tamil

நாம் அனைவருக்குமே நமது முகம் மிகவும் பொலிவுடன் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அப்படி நமக்கு உள்ள ஆசையை நிறைவேற்றி கொள்வதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. ரோஜா பூக்கள் – 4
  2. ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
  4. பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  5. கிளிசரின் – 1 டேபிள் ஸ்பூன்
  6. வைட்டமின் E  கேப்சூல் – 2

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் போதும் வறண்டு காணப்படும் முகம் சட்டுனு மிருதுவா மாறிவிடும்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 ரோஜா பூக்களில் உள்ள இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் உள்ள சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அதனுடனே 2 வைட்டமின் E  கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

இதனை தினமும் உறங்க செல்வதற்கு முன்னாள் உங்களின் முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே இருக்கவிடுங்கள் மறுநாள் காலையில் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெற தொடங்குவதை நீங்களே காணலாம்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

1 கப் பாசிப்பயறு போதும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் இருந்தயிடம் தெரியாமல் மறைந்துவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement