Natural Home Remedies For Skin Whitening in 7 Days
மனிதனாக பிறந்த அனைவருக்கும் நிறைய சின்ன சின்ன ஆசைகள் இருக்கும். அத்தகைய ஆசைகளில் ஒன்று தான் முக அழகும். முகம் பளிச்சென்று மாற என்ன செய்வது என்பது பெண்களுக்கும், ஆண்களுக்கும் எப்போதும் இருக்கும் ஆசை. அத்தகைய ஆசையினை எந்த விதமான செலவும் செய்யாமல், பார்லருக்கும் செல்லாமல் எப்படி பூர்த்தி செய்வது என்பதற்கு இன்றைய பதிவானது மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். ஏனென்றால் இன்று இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து Face பேக் தயார் செய்து 7 நாட்களில் முகத்தை பளிச்சென்று மாற்றுவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
முகம் பளிச்சென்று இருக்க:
- பீட்ரூட்- 1/2
- அரிசி மாவு- 1/4 கப்
- கடலை மாவு- 2 ஸ்பூன்
- முல்தானி மெட்டி- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
முகத்தை பளிச்சென்று மாற்ற மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
நரைமுடி கருமையாக மற்றும் தலை முடி அடர்த்தியாக வளர ஹேர் ஆயில் தயாரிப்பு
Face Pack For Glowing Skin at Home:
முதலில் எடுத்துவைத்துள்ள 1/2 பீட்ரூட்டினை எடுத்துக்கொண்டு அதில் இருந்து 3 ஸ்பூன் அளவிற்கு சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பீட்ரூட் சாற்றினை ஊற்றி அதனுடன் 1/4 கப் அரிசி மாவினை சேர்த்து நன்றாக கட்டியாகாமல் கலந்து கொள்ளுங்கள்.
இப்போது பாத்திரத்தில் உள்ள பொருளுடன் 2 ஸ்பூன் கடலை மாவினையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு 2 நிமிடம் கழித்து மீதம் இருக்கும் 1 ஸ்பூன் பீட்ரூட் சாற்றினையும் கலந்து கொண்டு மீண்டும் 2 நிமிடம் கலந்து விட்டு அடுப்பில் இருந்து இந்த பவுடரை கீழே இறக்கி வைத்து விடுங்கள்.
அடுத்து தயார் செய்து வைத்துள்ள பவுடரை ஆற வைத்து பின்பு மிக்சி ஜாரில் இதை சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து சலடையால் சலித்து கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க முகம் பளிச்சென்று மாற பவுடர் தயார்.
எப்படி பயன்படுத்துவது:
இப்போது ஒரு பவுலில் 1 ஸ்பூன் பீட்ரூட் பவுடருடன், 1 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு கலந்து வைத்துள்ள Face பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் அப்ளை செய்தால் போதும் முகம் பளிச்சென்று மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கைகளில் கொள்ளாத அளவுக்கு முடி வளர்ச்சி அதிகமாக..! குப்பையில் எரியும் பொருள் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |