Nithyakalyani Hair Dye
இன்றைய கால கட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனை போக்குவதற்காக நீங்களும் பல வேதிப்பொருட்கள் கலந்த ஷாம்பு மற்றும் Hair Dye போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். அவையாவும் நிரந்தரமான தீர்வை அளிக்குமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. இவற்றை ஒரு முறை பயன்படுத்தினால் சில காலங்களுக்கு மட்டுமே உங்களின் தலைமுடி கருப்பாக இருக்கும். பின்னர் மீண்டும் நரைமுடி வந்து விடும். ஆனால் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் குறிப்பானது இயற்கையான முறையில் உங்களின் நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்ற உதவும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் நரைமுடியை கருமையாக மாற்றி கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நரைமுடி கருமையாக நித்தியகல்யாணி ஹேர் டை:
இயற்கையான முறையில் உங்களின் நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்ற உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். அதற்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் பார்க்கலாம்.
- நித்தியகல்யாணி இலை – 1 கைப்பிடி அளவு
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- நெல்லிக்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சட்டுனு நரைமுடி கருப்பாக மாற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு நித்திய கல்யாணி இலையை ஒரு மிக்சி ஜாரில் நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
பின்னர் அந்த சாற்றுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
பொதுவாக நாம் நமது தலையில் ஏதாவது ஒரு ஹேர் டை, அல்லது ஹேர் பேக் தடவிக்கொள்ள இருக்கின்றோம் என்றால் நமது தலையில் எண்ணெய் பிசுக்கு இருக்க கூடாது.
அதனால் முதல் நாளே தலைக்கு குளித்து நமது தலையில் எண்ணெய் இல்லாத அளவிற்கு வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள கலவையை தலைமுடியின் வேரில் படுமாறு தடவி 1 – 2 மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள்.
இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள நரைமுடியை வேரிலிருந்து கருமையாக மாற்றி கொள்ளலாம்.
ஓமவல்லி இலை ஒன்று போதும் வெள்ளை முடிக்கு குட் பாய் சொல்லுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |