முகம் கண்ணாடி போல் மின்ன வேண்டுமா.! அப்போ இதை செய்திடுங்க..

Advertisement

முகம் கண்ணாடி போல் மின்ன

பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்வதற்காக கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முகம் பளபளப்பாக இருக்கும், ஆனால் நாளடைவில் முகம் பொலிவிழந்து காணப்படும். அதனால் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்:

முதலில் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். மேலும் வெளியில் சென்று வந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இரவு நேரத்தில் மேக்கப்பை ரிமூவ் செய்யாமல் தூங்கி விடாதீர்கள்.

அடுத்து தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும், நீங்கள் என்ன தான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்காக கிரீம் பயன்படுத்தினாலும் நிரந்தரமாக முகம் பளபளப்பாக இருக்க சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். மேலும் பழ ஜூஸ்களை குடிக்க வேண்டும்.

நன்றாக தூங்க வேண்டும், இரவு நேரத்தில் மொபைலை பயன்படுத்தி விட்டு தூக்கத்தை தள்ளி போடாதீர்கள். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது அவசியமானது.

அடுத்து மன அழுத்தத்தில் இருக்காதீர்கள், அப்படி உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் உங்களுடைய மனதை மாற்றுவதற்கு முயற்சியுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ளவையை சரியாக செய்து கீழ் சொல்லப்பட்டுள்ள பேக்கை பயன்படுத்துங்க..

உங்களுடைய வயதை 10 வருடம் குறைத்து காட்ட வேண்டுமா.!

கடலை மாவு பேக்:

முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்

ஒரு பவுலில் கடலை மாவு 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, தயிர் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

ஓட்ஸ் பேக்:

ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த  பேக்கை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.

1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் பளபளப்பாக மாறுவதை நீங்களே காணலாம்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement