எண்ணெய் வழியும் முகத்தை கூட பளபளப்பாக மாற்றலாம்..

Advertisement

Oil Skin Glowing Skin

நாள் முழுவதும் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக முகம் பொலிவிழந்து காணப்படுகிறது. பலரும் தங்களின் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு பார்லர் சென்று அழகுபடுத்தி கொள்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் காசு கொடுத்து காஸ்லியான மேக்கப் போட்டாலும் சிறிது நேரத்திலே அந்த மேக்கப்பானது கலைந்து விடும். இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக மாற்ற வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி.?

முகத்தை கழுவ வேண்டும்:

முகத்தை கழுவ வேண்டும்

முதலில் ஆயில் ஸ்கின் உடையவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கழுவ வேண்டும். முகத்தில் உள்ள ஆயிலை நீக்குவதற்கு பல கிரீம்களை பயன்படுத்துவதை விட முகத்தை கழுவுவது அவசியமானது. இதனால் முகத்தில் எண்ணெய் தங்குவதை தவிர்க்க முடியும்.

ஓட்ஸ் பேக்:

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி

ஓட்ஸ் முகத்தில் உள்ள அதிகமான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது. 

1/2 கப் ஓட்ஸை வெந்நீருடன் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உங்க முகத்தில் அப்ளை செய்து 3 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

முகம் பளபளப்பாக எதையும் அப்ளை செய்யாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!

முட்டை மற்றும் எலுமிச்சை:

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி

எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ் அமிலமானது முகத்தில் உள்ள எண்ணெயை உறிஞ்சுவதற்கு பயன்படுகிறது.

ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஊற்றி கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாற்றை 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உங்க முகத்தில் தடவி 1 மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

பாதாம்:

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி

ஒரு 10 பாதாமை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இதனுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனை 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

கற்றாழை:

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் முகத்தை பளபளப்பாக மாற்றுவது எப்படி

கற்றாழையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் எண்ணெய்களை நீக்குவதற்கு உதவுகிறது. நீங்கள் முதல் முறையாக கற்றாழையை பயன்படுத்துகிறீர்கள் என்றால் கையில் முதலில் பயன்படுத்தி பாருங்கள். ஏனென்றால் கற்றாழை சில பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

கற்றாழையில் உள்ள உள்பகுதியில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் ஏதாவது ஒன்றை தினமும் செய்து வந்தாலே முகம் பளபளப்பாக மாற்றலாம்.

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement