முடி நரைக்காமல் எப்போதும் கருமையுடன் இருக்க….நரைத்த முடியை சில நிமிடங்களிலே கருமையாக மாற்ற சில குறிப்புகள்..

அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு 

பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

கருமையான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கியம் சத்தான உணவுகளை உண்ணுவது. நெல்லிக்காய், முருங்கை கீரை, வெந்தயம், கறிவேப்பிலை, பருப்பு வகைகள், வேர்க்கடலை, காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

உங்கள் முடியை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே கருமையானதாக மாற்ற சில டிப்ஸ்

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

oil to make grey hair black in tamil

கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்! அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

எண்ணெய் தயாரிப்பதற்கான வழிமுறைகள்:

ஒரு சிறிய வாணலியில் தேங்காய் எண்ணையை சூடாக்கி அதனுடன் கருவேப்பிலை சேர்த்து அந்த எண்ணெயின் நிறம் கருமையாக மாறும் வரை சூடாக்க வேண்டும்.

அந்த எண்ணெயை வடிகட்டி குளிர்வித்து, அதனை உங்கள் தலையில் பயன்படுத்தும் போது அதில் சிறு துளி எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.

இப்போது அந்த குளிர்ந்த எண்ணெயை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும்.
குறைந்த பட்சம் ஒரு மணிநேரத்திற்கு உங்கள் தலையை உலர விடவும்.

oil to make grey hair black in tamil

பின்னர் செம்பருத்தி இலையை அறைந்து அதன் சாறை கொண்டு உங்கள் தலை முடியை அலசவும்.

இப்படி வாரத்திற்கு இருமுறை செய்வதால் உங்கள் முடியின் நிறம் மாறுவது மட்டுமல்லாமல் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்