இந்த 1 இலை போதும் நரைமுடி அனைத்தையும் அடியோடு கருப்பாக மாற்ற..!

Advertisement

ஓமவல்லி இலை முடிக்கு

பொதுவாக நாம் அனைவருக்கும் எப்போதும் கண்ணெதிரே இருக்கும் பொருள்களின் அருமை ஆனது அந்த அளவிற்கு தெரியாது. ஏனென்றால் இதில் என்ன அப்படி சத்துக்களும், பயன்களும் நிறைந்து இருக்க போகிறது என்று நினைத்து கடைகளில் விற்கும் பொருட்களை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துவதை ஒரு வழக்கமாக வைத்து இருக்கின்றோம். அப்படி பார்த்தால் நாம் அழகு மற்றும் ஆரோக்கியம் ரீதியாக தேவைப்படும் பொருளை தான் வாங்குகின்றோம். அதிலும் குறிப்பாக முடி வளர மற்றும் நரை முடி கருப்பாக என இதுபோன்ற காரணங்களுக்காக செலவு செய்வதே அதிகமாக இருக்கிறது. இவ்வாறு செலவு செய்து அவற்றை எல்லாம் பயன்படுத்தி வந்தாலும் கூட அதில் முழுமையான பலன் கிடைக்குமா என்பதில் தான் பெரிய சந்தேகமே இருக்கிறது. அதனால் இன்று இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய ஓமவல்லி இலையை வைத்து எப்படி நரை முடி அனைத்தினையும் கருப்பாக மாற்றுவது என்று தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Omavalli Leaf for Hair in Tamil:

நமது தலையில் காணப்படும் நரைமுடி அனைத்தும் கருப்பாக மாற ஹேர் டை தயார் செய்வதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • ஓமவல்லி இலை- 1 கைப்பிடி அளவு
  • செம்பருத்தி பூ- 15 பூக்கள்
  • வெள்ளை கரிசலாங்கண்ணி பவுடர்- 1 ஸ்பூன்
  • அவுரி பொடி- 2 ஸ்பூன்

ஓமவல்லி இலை முடிக்கு

இப்போது ஓமவல்லி இலையினை நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு செம்பருத்தி பூவில் இருக்கும் இதழ்களை பிரித்து நன்றாக அலசி வைத்து விடுங்கள்.

அடுத்து இந்த இரண்டு பொருளையும் மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் அரைத்த பேஸ்டை அதில் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு 1 ஸ்பூன் வெள்ளை சரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து நன்றாக கலந்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள்.

கடாயில் உள்ள கலவை நன்றாக கொதிக்க வைத்து அதாவது பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் கீழே இறக்கி நன்றாக ஆற விடுங்கள். பின்பு ஒரு 10 நிமிடம் கழித்து அவுரி பொடி 1 ஸ்பூன் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் டை தயார்.

எப்படி பயன்படுத்துவது..?

அவுரி இலை ஹேர் டை

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹைர் டையை உங்களுடைய தலையில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு 20 கழித்து தலையினை சுத்தமாக அலசி விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்தால் போதும் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் விரைவில் கருப்பாக மாறிவிடும்.

ஓமவல்லி இலை ஒன்று போதும் வெள்ளை முடிக்கு குட் பாய் சொல்லுங்க 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement