White Hair to Black Hair Dye
இன்றைய இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் உணவு முறை, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் நீங்கள் நரை முடியை சரி செய்வதற்கு ஆயில் மற்றும் ஹேர் டை போன்றவற்றை பயன்படுத்தினால் மட்டும் போதாது. அதனோடு சத்தான உணவுகள், சரியான நேரத்திற்கு தூக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் பயன்படுத்துகின்ற எந்த குறிப்பாக இருந்தாலும் அதிலிருந்து முழுமையான ரிசல்ட்டை பெற முடியும். இந்த பதிவில் நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு ஹேர் டையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
நரை முடியை கருப்பாக மாற்றுவதற்க்கு ஹேர் டை:
ஒரு கிண்ணத்தில் வெந்தயம் 1 தேக்கரண்டி, கலோஞ்சி விதைகள் 1 தேக்கரண்டி, காய்ந்த நெல்லிக்காய் 5 சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
ஊற வைத்த பொருட்களை மறுநாள் காலையில் தண்ணீரை வடிக்கட்டி பொருட்களை மட்டும் எடுத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
நீங்களே எதிர்பார்க்காத முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க..
அரைத்த பேஸ்ட்டை ஒரு இரும்பு கடாயில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் சீகைக்காய், நெல்லிக்காய் பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை இரண்டு நாட்கள் அப்படியே விடவும்.
இரண்டு நாட்கள் கழித்து பார்த்தால் கலவையானது கருப்பு நிறமாக வந்திருக்கும். மேலும் இவை கெட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலை முடியில் அப்ளை செய்து 2 மணி நேரம் அல்லது 4 மணி நேரம் வைத்திருந்து எந்த வித ஷாம்பும் பயன்படுத்தாமல் தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
முதலில் இதை பேக்கை பயன்படுத்தும் போது தலை முடியானது சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது தலை முடியானது கருப்பாக மாறிவிடும். வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள்..
உதிர்ந்த முடி அனைத்தும் அடர்த்தியாக வளர இந்த 2 பொருள் போதும்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |